Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜபல்பூர் » வானிலை

ஜபல்பூர் வானிலை

ஜபல்பூர் செல்வதற்கு மிகவும் உகந்த காலகட்டம் குளிர்காலங்களே ஆகும். அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகியவை குளிர்கால மாதங்களாகும். இச்சமயமே ஜபல்பூர் செல்ல மிகவும் உகந்த காலமாகும். பயணம் மேற்கொள்வதற்கு முன் நீங்கள் தங்கியிருக்கக்கூடிய நாட்களின் வெப்பநிலையை முன்னரே ஓரளவுக்கு அறிந்து வைத்துக் கொள்வதன் மூலம் பயணத்தின் போது அசௌகர்யங்கள் உண்டாவதைத் தவிர்க்கலாம். கதகதப்பான கம்பளி உடைகளை எடுத்துச் செல்ல மறவாதீர்கள்.

கோடைகாலம்

ஜபல்பூரில் கோடைகாலம் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்து ஜூன் மாதம் வரை தொடர்கிறது. கோடை மாதங்களின் போது வெப்பநிலை சுமார் 48 டிகிரி வரை செல்லும். கோடைகாலம் மிகவும் வெம்மையாகவும், வறட்சியோடும் காணப்படும் ஜபல்பூரில், இக்காலத்தின் போது, வெப்ப அலைகளும் சர்வசாதாரணமாக வீசுகின்றன. இச்சமயத்தின் போது வெளியே செல்லாமல் உள்ளேயே இருப்பது சாலச் சிறந்தது. கோடைகாலத்தின் போது இங்கு செல்வது உசிதமல்ல.

மழைக்காலம்

சுட்டெரித்த கோடைகாலத்திற்குப் பின் ஜபல்பூரில் ஆரம்பிக்கும் மழைக்காலம், ஜூன் மாதத்தின் கடைசி வாரம் வாக்கில் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை தன் கருணையைக் காட்டுகிறது. இச்சமயத்தில் இந்த இடம் சொல்லிக்கொள்ளும்படியான மழைப்பொழிவைப் பெறுகிறது. தென்மேற்குப் பருவமழைப் பகுதியான ஜபல்பூரில் அதிகபட்ச மழைப்பொழிவு இக்காலத்தின் இறுதியில், அதாவது, ஆகஸ்ட் மாதத்தில் இருக்கும்.

குளிர்காலம்

ஜபல்பூரில் அக்டோபர் மாத இறுதியில் குளிர்காலம் தொடங்குகின்றது. அக்டோபர் மாதம் ஆரம்பிக்கும் குளிர்காலம் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கின்றது. அதிகபட்ச வெப்பநிலை சுமார் 28 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்; ஆனால், சில சமயம், மெர்க்குரியின் அளவு 2 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தும் காணப்படும். இங்கு குளிர்காலம் மிகக் குளிராக இருந்தாலும், ரம்மியமாகவே இருக்கும். ஜபல்பூரின் குளிர்காலமே எல்லா வழிகளிலும் சிறந்த காலம் ஆகும். இக்காலமே ஜபல்பூரின் சுற்றுலாத் துறைக்கு மிகுந்த ஊட்டமளிக்கும் காலமாகவும் திகழ்கிறது.