Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜெயின்டியா மலைகள் » வானிலை

ஜெயின்டியா மலைகள் வானிலை

எல்லா பருவநிலைகளிலும் சுற்றுலாப் பயணிகள் பார்த்து இரசிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளதால் ஜெயின்டியா மலைகளுக்கு சுற்றுலாப் பயணிகள் வருடம் முழுவதும் வரலாம். மழைக்காலத்தில் பசுமையான மலைகளை காணும் போது, குளிர்காலமும், கோடைக்காலமும் இந்த பள்ளத்தாக்கின் அமைதியான மறுபக்கத்தை காட்டும். சுற்றுலாப் பயணிகள் அவர்களின் வசதிக்கேற்ப தங்களுடைய பயணத்தை திட்டமிடலாம்.

கோடைகாலம்

ஜெயின்டியா மலைகளின் கோடைக்காலம் மகிழ்ச்சியாகவும் மற்றும் குளிர்ச்சியாகவும் இருக்கும். இந்த பருவநிலையில் வெப்பமாகவும் இராது மற்றும் குளிராகவும் இராது. ஜெயின்டியா மலைகளின் மூச்சைத் திணறடிக்கும் காட்சிகளை காண இதுவே சிறந்த பருவம். ஜெயின்டியா மலைகளில் உள்ள சில குகைகளை சுற்றிப் பார்ப்பதற்கு மிகவும் ஏற்ற பருவமும் கோடைக்காலமே!

மழைக்காலம்

மேகாலயா மாநில வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக மழை இருப்பதால், ஜெயின்டியா மலைகளும் அபரிமிதமான மழைப்பொழிவை பெறுகின்றன. ஜுன் மாதத்தில் தொடங்கும் மழைக்காலம் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதம் வரையிலும் நீடித்திருக்கும். மிகவும் அதிக மழைப்பொழிவின் காரணமாக மாலிடாருக்கு அருகில் சில்ச்சார் செல்லும் பாதையில் தொடர்ச்சியாக நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

குளிர்காலம்

ஜெயின்டியா மலைகளின் குளிர்காலம் நிலவும் மாதங்களாக நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் உள்ளன. குறைந்த பட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையிலும் சென்று விடும் குளிர்காலத்தில் ஜெயின்டியா மலைகள் மிகவும் குளிரான பகுதியாக இருக்கும். எனினும், நாள் முழுவதும் சூரிய வெளிச்சம் இருப்பதால் வெளியில் சென்று வர ஏற்ற பருவமாகவே இதுவும் கருதப்படுகிறது.