Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜெய்சல்மேர் » வானிலை

ஜெய்சல்மேர் வானிலை

பிரசித்தமான பாலைவனத்திருவிழா ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தின் போது ஜெய்சல்மேரில் கொண்டாடப்படுகிறது. அது தவிர செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படும் ராம்தேவ்ரா சந்தைப்பொருட்காட்சிக்கு உலகெங்கிலுமிருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். பொதுவாக ஜெய்சல்மேர் நகருக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள உகந்த காலம் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான இடைப்பட்ட காலமாகும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைக்காலமானது மே மாதம் வரையில் நீடிக்கின்றது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக இப்பகுதியில் முறையே 45.6° C மற்றும் 25.6° C நிலவுகிறது. கோடைக்காலத்தின் போது இங்கு வெப்பம் மிகக்கடுமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை): ஜெய்சல்மேர் பிரதேசம் மழைக்காலத்தின் போது மிகக்குறைந்த அளவு மழையையே பெறுகிறது. இக்காலத்தில் சராசரி மழைப்பொழிவாக 15 செ.மீ அளவு மழையை இப்பகுதி பெறுகிறது.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை): ஜெய்சல்மேர் குளிர்காலத்தின் போது மிக இனிமையான சூழலுடன் காட்சியளிக்கின்றது. இக்காலத்தில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக முறையே 23.6° C மற்றும் 4.9° C இப்பகுதியில் நிலவுகிறது.