Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜாம்நகர் » வானிலை

ஜாம்நகர் வானிலை

ஜாம்நகர் பகுதி குளிர்காலத்தில் இனிமையான சூழலை கொண்டிருக்கிறது. கோடை மற்றும் மழைக்காலம் இங்கு விஜயம் செய்வதற்கு உகந்ததல்ல.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை) : கடலுக்கு அருகே உள்ளதால் கோடைக்காலத்தில் ஜாம்நகர் கடும் ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. மார்ச் முதல் ஜுன் வரை இங்கு கோடைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் சராசரி குறைந்த வெப்பநிலை 26°C ஆகவும் அதிகபட்ச வெப்பநிலை 37°C ஆகவும் உள்ளது.

மழைக்காலம்

(ஜுன் முதல் செப்டம்பர் வரை) : ஜுன் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இங்கு மழைக்காலம் நீடிக்கிறது. ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் கடும் மழைப்பொழிவை இப்பகுதி பெறுகிறது.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை) : அக்டோபர் முதல் பிப்ரவரி வரை ஜாம்நகர் குளிர்காலத்தை பெறுகிறது. இக்காலத்தில் இப்பகுதி இதமான இனிமையான சூழலுடன் காணப்படுகிறது. குறிப்பாக பிப்ரவரி மாதத்தில் குளுமையான சூழல் நிலவுவதால் சுற்றுலா மேற்கொள்ள மிகவும் ஏற்றது. குளிர்காலத்தில் சராசரி வெப்பநிலை 12°C முதல் 32°C வரை காணப்படுகிறது.