Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜௌன்பூர் » வானிலை

ஜௌன்பூர் வானிலை

நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரையிலான பருவமே இந்த நகரத்துக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது

கோடைகாலம்

(மார்ச்  முதல் மே வரை) : ஜௌன்பூர் நகரத்தில் மார்ச் முதல் மே வரை கோடைக்காலம் நீடிக்கிறது. குறிப்பாக மே மாதத்தில் கடும் உஷ்ணம் இப்பகுதியில் நிலவுகிறது.  இக்காலத்தில் 25°C  துவங்கி அதிகபட்சம் 40°C  வரை வெப்பநிலை செல்லக்கூடும். 

மழைக்காலம்

(ஜுலை முதல் செப்டம்பர் வரை) : ஜுலை முதல் செப்டம்பர் வரை ஜௌன்பூர் நகரத்தில் மழைக்காலம் நீடிக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் இங்கு கடும் மழைப்பொழிவு நிலவுகிறது. இக்காலத்தில் நகர்ப்பகுதி ஈரமாகவும் சூழலில் ஈரப்பதம் நிரம்பியும் வானமுழுதும் மேகமூட்டத்துடனும் காணப்படும். விட்டுவிட்டு கனமழையும் பெய்யக்கூடும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : ஜௌன்பூர் நகரத்தில் குளிர்காலத்தின்போது இதமான இனிமையான சூழல் காணப்படுகிறது. இக்காலத்தில் 9°C  துவங்கி அதிகபட்சம் 25°C  வரை வெப்பநிலை நிலவுகிறது.