குளிர்காலம் முடிந்தவுடன் துவங்கும் பருவம் ஜல்லாங் நகரத்திற்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.
கோடைக்காலத்தில் ஜல்லாங் நகரம் மிதமான சூழலை கொண்டுள்ளது. இக்காலத்தில் 32°C க்கு மேல் வெப்பநிலை உயர்வதில்லை.
ஜுன் மாதம் துவங்கி செப்டம்பர் வரை ஜல்லாங் நகரத்தில் மழைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் தொடர்ச்சியான மழைப்பொழிவு காணப்படுவதால் போக்குவரத்து மற்றும் சுற்றுலா போன்ற யாவுமே பாதிக்கப்படுகின்றன.
10°C க்கு கீழே செல்லும் குறைந்தபட்ச வெப்பநிலையுடன் ஜல்லாங் நகரம் குளிர்காலத்தில் கடுமையான குளிர் நிரம்பியதாக காட்சியளிக்கிறது.