Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜொவாய் » வானிலை

ஜொவாய் வானிலை

ஜொவாய்க்கு சுற்றுலா செல்ல குளிர் மற்றும் கோடை காலமே மிகவும் சிறந்த பருவம் ஆகும். குளிர்காலத்தில் இங்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் தங்களுடன் கனமான கம்பளி ஆடைகளை உடன் எடுத்து வருவது நல்லது. குளிர் மற்றும் கோடை காலங்களில் இங்கு சுற்றுலா வருவது மிகவும் சிறந்தது. ஏனெனில் இந்த பருவத்தில் சாலைகள் தெளிவாக உள்ளன. மேலும் இது ட்ரெக்கிங் செல்வதற்கு ஒரு சிறந்த பருவம் ஆகும்.

கோடைகாலம்

ஜொவாய் ஒரு பீடபூமியில் அமைந்துள்ளதால் இங்கு கோடையில் அதிக வெப்பம் தென்படுவது இல்லை. இங்கே கோடை காலம் மார்ச் மாதத்தில் ஆரம்பித்து மே மாதத்தில் முடிவடைகின்றது. இங்கு கோடையின் அதிக பட்ச  வெப்பநிலை சுமார் 22 டிகிரி செல்ஸியஸை ஒட்டியே காணப்படுகின்றது. எனினும் இங்கு கோடைகாலத்தில் , இரவு நேர வெப்பநிலை திடீரென சரிந்து மிகவும் குறைந்து விடும். இதனால் இங்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் எப்போதும் தங்களுடன் கம்பளி ஆடைகளை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மழைக்காலம்

மழைக்காலம் என்பது ஜொவாய் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இருக்கின்றது. இங்கு சீக்கிரமே பருவமழை தொடங்கி விடுகின்றது. இங்கு மே மாதத்தில் தொடங்கும் பருவமழை பல மாதங்களுக்கு அதாவது அக்டோபர் மாதம்  வரை  நீடிக்கின்றது. கடும் மழை காரணமாக கிராமப்புறங்கள் எல்லாம் பசுமை ஆடையை போர்த்திக் கொண்டு கண்ணுக்கு இனிய அழகிய காட்சிகளை வழங்குகின்றன. எனினும், மழையின் காரணமாக ஜோவாயின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது.

குளிர்காலம்

இங்கு நவம்பர் மாதத்தில் தொடங்கும் குளிர்காலம் பிப்ரவரி இறுதி வரை நீடிக்கின்றது. இங்கு குளிர்காலம் உலர்ந்து காணப்படும். மேலும் இங்கு குளிர்காலத்தில் அவ்வப்போது சிறு தூரல் இருக்கும். குளிர்காலத்தில் யாரும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு வெப்பநிலை மிகவும் குறைந்து சுமார் 4 டிகிரி செல்சியஸ் வரை சென்று விடுகின்றது. குளிர்கால  இரவுகள் மிகவும் குளிராகவும் பகல் பொழுது மிகுந்த பிரகாசத்துடன் காணப்படுகின்றது.