Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜுன்னர் » வானிலை

ஜுன்னர் வானிலை

பொதுவாக ஜுன்னர் சுற்றுலாத்தலம் வறண்ட வெப்பப்பிரதேச பருவநிலையைக் கொண்டிருக்கிறது. இது ஏறக்குறைய புனேயின் சீதோஷ்ணநிலையை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  இந்த சுற்றுலாத்தலத்திற்கு குளிர்காலத்தில் பயணம் மேற்கொள்வது சிறந்தது. ஊர் சுற்றி பார்க்கவும் இயற்கையை ரசிக்கவும் இக்காலமே பொருத்தமாக உள்ளது.

கோடைகாலம்

ஜுன்னர் பகுதியில் கோடைக்காலம் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை நீடிக்கின்றது. பெரும்பாலும் வறட்சியான சூழலைக் கொண்டிருக்கும் இக்காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 38°C  ஆகவும் குறைந்தபட்சமாக 30°C  வரையிலும் காணப்படுகிறது. கோடைக்காலத்தில் பொசுக்கும் வெப்பம் பயணத்துக்கு இடைஞ்சலாகவே இருக்கிறது. குறிப்பாக ஏப்ரல் மே மாதங்களில் உஷ்ணம் அதிகமாக உள்ளது.

மழைக்காலம்

ஜுன்னர் பகுதி மேற்குத்தொடர்ச்சி மலைக்காற்றுகளிலிருந்து விலகி இருப்பதால் ஜுன் முதல் செப்டம்பர் வரை நிலவும் மழைக்காலத்தில்  மிதமான மழைப்பொழிவையே பெறுகிறது. இக்காலத்தில் ஜுன்னர் பகுதியில் வெப்பநிலை அதிகபட்சம் 28°C  ஆகவும் குறைந்தபட்சமாக 10°C  வரையிலும் காணப்படுகிறது. ஜுன் மாதமானது வருடத்திலேயே ஈரமான பருவமாக உள்ளது.

குளிர்காலம்

ஜுன்னர் பகுதியில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இனிமையான குளிர்காலம் நிலவுகிறது. குளிர்காலத்தில் மிகக் குறைந்தபட்ச வெப்பநிலையாக  6°C  ஆகவும் அதிகபட்சமாக 28°C  வரையிலும் காணப்படுகிறது. பகலில் குளுமையாகவும் இரவில் மிகக்குளிருடனும் ஜுன்னர் பகுதி உள்ளது. இக்காலத்தில் பயணம் மேற்கொண்டால் குளிர் உடைகளுடன் பயணிப்பது சிறந்தது.