Search
  • Follow NativePlanet
Share

காலாஹண்டி - தொன்மை நாகரீகத்தை கொண்ட புதையல் பூமி!

18

வளமையான வரலாறு மற்றும் கலையை கொண்ட காலாஹண்டி என்பது ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். உட்டேய் மற்றும் டெல் நதிகள் சங்கமாகும் இடத்தில் உள்ள இந்த இடத்தில் பழமையான பல கோவில்கள் உள்ளன. 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த இக்கோவிலில் அருமையான கட்டடக் கலையை காண நேரிடலாம்.

ஓவியத்தை போல் உள்ள மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள அழகிய நகரம் இது. கற்காலம் மற்றும் இரும்புக் காலத்திற்கான பல தொல்பொருள் ஆதாரங்கள் இந்த இடத்தில் கிடைத்துள்ளன.

இங்கு ஒவ்வொரு வருடமும் காலாஹண்டி உத்சவ் கொண்டாடப்படுகிறது. இந்த உத்சவத்தில் உலகளாவிய புகழ் பெற்ற இதன் கவின் கலைகள், பண்பாடு, இசை மற்றும் கைவினை பொருட்கள் காட்சிப்படுத்தப்படும்.

காலாஹண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள்

காலாஹண்டி சுற்றுலா இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல அறிய மற்றும் அழகிய தலங்களை கொண்டுள்ளது. அவை வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடங்களாகவும் இயற்கை அழகு கொஞ்சும் இடங்களாகவும் விளங்குகின்றன.

2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் தடயங்கள் இங்குள்ள அசுர்கர் என்ற இடத்தில் கிடைத்துள்ளது. குடஹண்டி என்ற மலையில் அழகிய ஓவியங்களை கொண்ட குகைகள் பல உள்ளன.

ரபண்டர் என்ற ஒரு அழகிய நீர்வீழ்ச்சியும் உண்டு. மோகனகிரி என்ற இடத்தில் ஒரு பழமையான சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் இயற்கை அழகுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இங்கு தான் லால் பகதூர் சாஸ்த்ரி விளையாட்டரங்கம் அமைந்திருக்கிறது. இங்கே பல விளையாட்டுக்களும் விழாக்களும் நடத்தப்பட்டுள்ளன.

காலாஹண்டியை அடைவது எப்படி?

காலாஹண்டியை ஒடிசாவிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலிருந்தும் சுலபமாக வந்தடையலாம். இங்கு இரயில் மூலமாக வர வேண்டுமானால் கேசிங்கா இரயில் நிலையம் மூலமாக வரலாம். விமானம் மூலமாக இங்கே வர வேண்டுமானால் புவனேஷ்வர் விமான நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

காலாஹண்டிக்கு சுற்றுலா வருவதற்கான சிறந்த பருவம்

காலாஹண்டிக்கு மழைக்காலத்தின் போது சுற்றுலாவிற்கு வருவதே சிறப்பானதாக இருக்கும்.

காலாஹண்டி சிறப்பு

எப்படி அடைவது காலாஹண்டி

  • சாலை வழியாக
    தேசிய நெடுஞ்சாலை 201 மற்றும் 217 என இரண்டு முக்கிய சாலைகள் காலாஹண்டியை கடந்து செல்கின்றன. பல மாநில அரசு பேருந்துகள் முக்கிய நகரங்களான புபனேஷ்வர், கட்டாக், சம்பல்பூர் போன்றவைகளை காலாஹண்டியுடன் இணைக்கும். இது போக பல தனியார் பேருந்துகளும் கூட இங்கு இயங்குகின்றன. புபனேஷ்வரில் இருந்து பேருந்து மூலமாக காலாஹண்டி வருவதற்கு 120 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கேசிங்கா இரயில் நிலையம் தான் காலாஹண்டிக்கு மிக அருகாமையில் இருக்கும் இரயில் நிலையமாகும். இங்கிருந்து இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களான மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் சென்னைக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதனால் இரயில் மூலமாக காலாஹண்டிக்கு செல்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது. இது போக இங்கு பல சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்பட்டு தருவதால் இரயிலில் இருந்து இறங்கியதுமே சுலபமாக சுற்றுலாவை தொடங்கலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    காலாஹண்டியை இங்கிருந்து 259 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ராய்பூர் விமான நிலையம் மூலமாகவோ அல்லது 341 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள விசாகபட்டணம் விமான நிலையம் மூலமாகவோ வந்தடையலாம். இங்கிருந்து 450 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள புபனேஷ்வர் விமான நிலையம் மூலமாகவும் வரலாம். இந்த விமான நிலையங்களில் இருந்து பேருந்து மூலமாக காலாஹண்டியை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat