Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கஞ்சன்ஜங்கா » ஈர்க்கும் இடங்கள் » கஞ்சன்ஜங்கா நேஷனல் பார்க்

கஞ்சன்ஜங்கா நேஷனல் பார்க், கஞ்சன்ஜங்கா

14

கஞ்சன்ஜங்கா நேஷனல் பார்க் எனும் இந்த தேசியப்பூங்கா 1977ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தின் மிகப்பெரிய தேசியப்பூங்காவான இது 850 ச.கி.மீ பரப்பளவில் வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் பரந்துள்ளது.

இது வடக்கில் டெண்ட் பீக் சிகரத்தையும் கிழக்கில் மவுண்ட் லமோ ஆங்க்டென் பீடபூமி மலையையும் எல்லைகளாக கொண்டுள்ளது. இதன் தெற்குப்பகுதியில் மவுண்ட் நார்சிங் மற்றும் மவுண்ட் பாண்டிங் போன்ற மலைகளும் மேற்குப்பகுதியில் கஞ்சன்ஜங்கா மலையும் அமைந்துள்ளன.

இந்த பூங்காவின் சுற்றுச்சூழல் எவ்விதத்திலும் மனித இடையூறுகளால் பாதிக்கப்படாமல் உள்ளதால் பல்வேறு உயிரினங்களுக்கான பாதுகாப்பான வாழ்விடமாக திகழ்கிறது.

அருகி வரும் உயிரினங்களான பனிச்சிறுத்தை, ஏசியாட்டிக் கருப்புக்கரடி, ஹிமாலயன் கஸ்தூரி மான், சிவப்பு பாண்டா ஆகியவை இந்த வனப்பகுதியில் வசிக்கின்றன. இன்னும் சரியாக ஆராயப்படாத இந்த இயற்கை பூங்காவில் பல அரிய வகை உயிரினங்களும் இருக்கக்கூடும் என்று ஊகிக்கப்படுகிறது.

ஓக், ஃபிர், பிர்ச், மேப்பிள் மற்றும் வில்லோ போன்ற அபூர்வ மரங்கள் இந்த வனப்பகுதியில் நிரம்பியுள்ளன. அல்பைன் புல்வெளி மற்றும் புதர்க்காடுகளையும் இது கொண்டுள்ளது.

இவற்றில் பல அரிய மூலிகைத்தாவரங்களும் காணப்படுகின்றன. ரத்தக்காக்கை, சத்யே ட்ராகோபான், ஓஸ்பிரே, ஹிமாலயன் கிரிஃப்பான், லாமெர்கெயர் மற்றும் டிராகோபான் காக்கை போன்ற பறவைகளும் இதில் வசிக்கின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed

Near by City