சிக்கிம் பிரதேசத்திலுள்ள மிக உயர்ந்த மலைகளில் ஒன்றான இந்த மவுண்ட் சினியோல்ச்சு கடல் மட்டத்திலிருந்து 6888 மீ உயரத்தில் அமைந்துள்ளது. கஞ்சன்ஜங்கா மலைக்கு அருகிலுள்ள கிரீன் லேக் ஏரியா எனும் இடத்துக்கு அருகில் இந்த மலை அமைந்திருக்கிறது.
பனிமூடிக்காணப்படும் இந்த மவுண்ட் சினியோல்ச்சு சிகரம் ஏராளமான சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து வருகிறது. இது எழுத்தாளர்களுக்கு மிகவும் பிடித்த இடமாகவும் இருந்து வருகிறது.
பிரபலமான மலையேறியும் எழுத்தாளருமான டக்ளாஸ் ஃப்ரெஷ்ஃபீல்ட் தனது புத்தகங்களில் இந்த மவுண்ட் சினியோல்ச்சு சிகரம் பற்றி இப்படி குறிப்பிட்டுள்ளார் – “இயற்கையின் மலைப்படைப்புகளில் இந்த பனிமலையின் அழகு போன்று வேறெங்குமில்லை”.



Click it and Unblock the Notifications