Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கஞ்சன்ஜங்கா » வானிலை

கஞ்சன்ஜங்கா வானிலை

கஞ்சன்ஜங்கா மலைப்பிரதேசம் வருடமுழுதும்  இனிமையான குளுமையான சூழலை கொண்டுள்ளது. எனவே எப்போது வேண்டுமானாலும் இங்கு பயணம் மேற்கொள்ளலாம். இருப்பினும் மழைக்காலத்தை தவிர்த்து விடுவது நல்லது. கோடைக்காலம் இதமான சூழலுடன் பயணத்துக்கு மிக ஏற்றதாக காணப்படுகிறது.

கோடைகாலம்

( மார்ச் முதல் மே மாதம் வரை) : கஞ்சன்ஜங்கா மலைப்பகுதி மார்ச் முதல் மே மாதம் வரை கோடைக்காலம் நிலவுகிறது. கோடைக்காலத்தின்போது இங்கு சராசரியாக 10°C  முதல் 28°C வரை வெப்பநிலை காணப்படும். கோடைக்காலத்திலும் இங்கு குளிருக்கான உடைகளுடன் பயணிப்பது அவசியம். கோடைக்காலம் கஞ்சன்ஜங்காவுக்கு பயணம் செய்ய ஏற்ற பருவமாகவும் அறியப்படுகிறது.  

மழைக்காலம்

கஞ்சன்ஜங்கா மலைப்பகுதி தென்மேற்கு பருவ மழையை வெகுவாக பெறுகிறது.   ஜூன் மாதம் இங்கு மழைக்காலம் துவங்குகிறது.  அக்டோபர் மாதத்தில் மழைக்காலம் முடிந்து சுற்றுலாப்பருவம் துவங்கி விடுகிறது.

குளிர்காலம்

கஞ்சன்ஜங்கா மலைப்பகுதியில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலம் நீடிக்கிறது.  இக்காலத்தில் இப்பகுதியில் வெப்பநிலை -5°C  வரை இறங்கி காணப்படும். அதிகபட்சமாக 16°C வரை செல்லக்கூடும்.