Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» கஞ்சன்ஜங்கா

கஞ்சன்ஜங்கா – விண்னை முட்டும் இமாலய வெள்ளி மலை!

14

கஞ்சன்ஜங்கா மலை உலகிலேயே மிக உயரமான 3-வது மலைச்சிகரம் எனும் பெருமையுடன் இமாலயத்தில் வீற்றிருக்கிறது. இது இந்திய நேபாள எல்லைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 8586 மீ உயரத்தில் அமைந்துள்ளது. கஞ்சன்ஜங்கா எனும் பெயருக்கு ‘பனிமலையின் ஐந்து புதையல்கள்’ என்பது பொருளாகும். இப்பகுதியில் அமைந்துள்ள ஐந்து மலைச்சிகரங்கள் தங்கம், வெள்ளி, ரத்தினம், தானியம் மற்றும் வேதநூல் ஆகிய ஐந்து முக்கிய பொருட்களை குறிப்பதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.

ஐந்து சிகரங்களை உள்ளடக்கிய கஞ்சன்ஜங்கா மலைப்பகுதியில் பிரதான, மத்திய மற்றும் தெற்குப்பகுதியில் உள்ள மூன்று  சிகரங்கள் இந்தியாவின் வடக்கு சிக்கிம் எல்லையையும் நேபாளத்தின் தப்லேஜங் மாவட்டத்தையும் தொட்டபடி எழும்பியுள்ளன.

இதர இரண்டு சிகரங்கள் முழுக்க நேபாளப்பகுதியில் அமைந்திருக்கின்றன. இருப்பினும் கஞ்சன்ஜங்கா மலையில் மொத்தம் 12 சிகரங்கள் சரசரியாக 23000 அடி உயரத்தில் காணப்படுகின்றன.

கஞ்சன்ஜங்கா மலைப்பரப்பானது பூடான், சீனா, இந்தியா மற்றும் நேபாள் போன்ற நாடுகளால் பகிர்ந்துகொள்ளப்பட்டிருக்கிறது. இங்கு 14 பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் 2329 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளன.

இவற்றில் ரோடோடென்ரோன் மர வகைகள் மற்றும் ஆர்க்கிட் மலர்த்தாவரங்களும், அருகி வரும் உயிரினங்களான பனிச்சிறுத்தை, ஏசியாட்டிக் கருப்புக்கரடி, ஹிமாலயன் கஸ்தூரி மான், சிவப்பு பாண்டா, ரத்தக்காக்கை மற்றும் செஸ்ட்னெட் பிரெஸ்ட்டட் பாட்ரிட்ஜ் (கௌதாரி) ஆகியனவும் வசிக்கின்றன.

வரலாற்றுத்தகவல்கள்

கஞ்சன்ஜங்கா மலை பல சுவாரசியமான வரலாற்றுக்கதைகளை பின்னணியில் கொண்டுள்ளது. 1852 வரை இதுதான் உலகிலேயே மிக உயரமான மலையாக கருதப்பட்டு வந்திருக்கிறது.

1849ம் ஆண்டு எடுக்கப்பட்ட முக்கோணவியல் நில அளவியல் திட்டத்தின் போது பல்வேறு கணக்கீடுகளுக்கு பின்னர் மவுண்ட் எவரெஸ்ட் மலையே மிக உயரமானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. 1856ம் ஆண்டில் இம்மலை மூன்றாவது இடத்துக்கு நகர்த்தப்பட்டது.

சுற்றுலா அம்சங்கள்

டார்ஜிலிங் பகுதியிலிருந்து காணக்கிடைக்கும் கஞ்சன்ஜங்கா மலையின் அழகு சர்வதேச அளவில் பிரசித்தமாக அறியப்படுகிறது. இந்த மலையில் மலையேற்றம் செய்வதற்கான அனுமதி சுலபத்தில் கிடைப்பதில்லை என்பதால் இது தனது கன்னிமை கெடாது தூய்மையுடன் வீற்றிருக்கிறது.

ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு வண்ணங்களில் இம்மலை காட்சியளிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

டார்ஜிலிங் போர் நினைவுச்சின்னத்திலிருந்து கஞ்சன்ஜங்கா மலையின் அழகை நன்றாக பார்த்து ரசிக்கலாம். நிர்மலமான பருவநிலை நிலவும் பட்சத்தில் இந்த மலைகள் வானத்திலிருந்து தொங்கிக்கொண்டிருக்கும் வெள்ளை நிற சுவர்கள் போன்று காட்சியளிக்கின்றன. சிக்கிம் மாநில மக்கள் இம்மலையை புனித மலையாக கருதுவதும் குறிப்பிடத்தக்கது.

இம்மலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மலையேற்றப்பாதைகளில் கோயேச்சா லா டிரெக் மற்றும் கிரீன் லேக் பேசிக் பாதை ஆகியவை பிரசித்தமாகி வருகின்றன. வருடமுழுதும் கஞ்சன்ஜங்கா மலைப்பகுதி இனிமையான பருவநிலையுடன் காட்சியளிக்கிறது.

கஞ்சன்ஜங்கா சிறப்பு

கஞ்சன்ஜங்கா வானிலை

சிறந்த காலநிலை கஞ்சன்ஜங்கா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கஞ்சன்ஜங்கா

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri