Search
  • Follow NativePlanet
Share

கந்தமால் – சொக்க வைக்கும் இயற்கை எழில்!

20

கந்தமால் ஒடிஷா மாநிலத்தின் மிக அழகான இயற்கை சுற்றுலாத்தலமாக பிரசித்தமடைந்துள்ளது. தூய்மை கெடாத இயற்கை அழகு வாய்க்கப்பெற்ற இந்த பிரதேசத்தில் இந்தியாவின் முக்கியமான ஆதிகுடி மக்கள் வசிக்கின்றனர். தரிங்படி எனும் உயர்ந்த மலையின் உச்சி வரை நீண்டிருக்கும் காபி தோட்டங்களை பயணிகள் இங்கு பார்த்து ரசிக்கலாம். பிரம்பு, மூங்கில், சுடுமண் மற்றும் டோக்ரா ஆகியவற்றால் ஆன பல்வேறு கைவினைப்பொருட்களுக்கும் கந்தமால் பிரசித்தி பெற்றுள்ளது.

கந்தமால் மற்றும் சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்

கந்தமால் மாவட்டம் முழுக்க பல சுற்றுலாத்தலங்கள் நிரம்பியுள்ளன. இவை வருடமுழுதும் இயற்கை ரசிகர்களையும் சுற்றுலாப்பயணிகளையும் ஈர்த்த வண்ணம் உள்ளன.

புடுதி நீர்வீழ்ச்சி, லுடு நீர்வீழ்ச்சி, கத்ரமால் மற்றும் பாகதாதரா நீர்வீழ்ச்சி போன்றவை உள்ளூர் ரசிகர்களை மட்டுமல்லாமல் வெகு தூரத்திலிருந்தும் பயணிகளை கவர்ந்திழுக்கின்றன.

சக்கபடா எனும் கிராமத்திலுள்ள சிவன் கோயில் ஒன்று ஆன்மீக ஆர்வலர்களை வெகுவாக கவர்கிறது. இரண்டு மலைகள் ஒன்று சேரும் இடத்தில் அமைந்துள்ள பலஸ்கும்பா எனும் கிராமம் தனது ரம்மியமான இயற்கைக்காட்சிகளுடன் பயணிகளுக்காக காத்திருக்கிறது. உள்ளூர் பழங்குடி மக்கள் வாழும் இப்பகுதியில் காட்டுயிர் அம்சங்களும் ஏராளமாக நிரம்பியுள்ளன.

பெல்கார் எனும் மற்றொரு ரம்மியமான சுற்றுலாத்தலமும் கந்தமால் பகுதியில் பார்க்க வேண்டிய இடமாகும். இதுதவிர கலிங்கா பள்ளத்தாக்கு பிரதேசத்தில் மரத்தோட்ட பூங்கா மற்றும் மூலிகை தோட்டப்பூங்கா போன்றவை அமைந்துள்ளன.

இங்கு வீசும் நறுமணம் ஒன்றே பயணிகளை புத்துணர்ச்சியூட்ட போதுமானதாக உள்ளது. சாகச விரும்பிகள் புல்பணி பகுதியில் மலையேற்றம் மற்றும் சலுங்கி ஆற்றில் படகுச்சவாரி போன்றவற்றில் ஈடுபடலாம்.

மேலும், தரிங்பாடி எனும் இடத்தில் கோடை ரிசார்ட் விடுதி ஒன்றும் அமைந்துள்ளது. குளிர்காலத்தில் இப்பகுதியில் பனிப்பொழிவும் காணப்படுகிறது.

கந்தமால் சுற்றுலாத்தலத்திற்கு எப்போது விஜயம் செய்யலாம்?

செப்டம்பர் முதல் மே வரையிலான மாதங்கள் கந்தமால் பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்றவையாக உள்ளன.

எப்படி செல்லலாம் கந்தமால் சுற்றுலாத்தலத்திற்கு?

புவனேஸ்வர், சம்பல்பூர் மற்றும் பெஹ்ராம்பூர் போன்ற நகரங்களுடன் நல்ல சாலை போக்குவரத்து வசதிகளால் கந்தமால் மாவட்டம் இணைக்கப்பட்டிருக்கிறது. அருகிலுள்ள ரயில் நிலையம் 3 கி.மீ தூரத்தில்  ரைராகோல் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

விமானப்போக்குவரத்துக்கு வசதியாக புபனேஸ்வர் விமான நிலையம் அமைந்திருக்கிறது. செப்டம்பர் முதல் மே வரையிலான மாதங்களில் கந்தமால் பகுதியில் சுற்றுலா செயல்பாடுகள் தீவிரமடைகின்றன.

கந்தமால் சிறப்பு

எப்படி அடைவது கந்தமால்

  • சாலை வழியாக
    கந்தமால் சுற்றுலாத்தலத்திற்கு புவனேஸ்வர், சம்பல்பூர் மற்றும் பெஹ்ராம்பூர் போன்ற நகரங்களிலிருந்து சாலை போக்குவரத்து வசதிகள் மூலமாக சென்றடையலாம். சில இடங்களில் சாலைகள் மேடு பள்ளமாக காணப்பட்டாலும் செல்லும் வழி நெடுக இயற்கை காட்சிகள் இருபுறமும் நிரம்பி வழிகின்றன. புவனேஸ்வர், சம்பல்பூர் மற்றும் பெஹ்ராம்பூர் போன்ற நகரங்களிலிருந்து புல்பணிக்கு ஒடிஷா அரசு பேருந்து சேவைகள் கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கந்தமால் சுற்றுலாத்தலத்திற்கு அருகில் உள்ள ரயில் நிலையம் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ல ரைராகோல் எனும் இடத்தில் உள்ளது. இருப்பினும் புல்பணியிலிருந்து 165 கி.மீ தூரத்தில் உள்ள பெஹ்ராம்பூர் ரயில் நிலையம் போக்குவரத்திற்கு வசதியாக அமைந்திருக்கிறது. இந்த இரண்டு நிலையங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் புல்பணி ஸ்தலத்தை வந்தடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கந்தமால் சுற்றுலாத்தலத்திற்கு அருகில் 4 கி.மீ தூரத்தில் புபனேஷ்வர் நகரத்தின் பிஜு பட்நாயக் விமானநிலையம் அமைந்துள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து தினசரி விமான சேவைகள் உள்ளன. இந்த விமான நிலையத்திலிருந்து பேருந்துகள் மூலம் பயணிகள் கந்தமால் மாவட்டத்துக்கு வரலாம். இது தவிர புல்பணியிலிருந்து 5 கி.மீ தூரத்தில் குடரி எனும் இடத்தில் ஒரு சிறிய விமான தளம் உள்ளது. சிறிய விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்றவை இங்கு இறங்கலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
16 Apr,Tue
Return On
17 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
16 Apr,Tue
Check Out
17 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
16 Apr,Tue
Return On
17 Apr,Wed