Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» கன்னியாகுமரி

கன்னியாகுமரி - எழில்மிகு விடியல்களும்! அஸ்த்தமனங்களும்!

36

ஆங்கிலேயர்களால் 'கேப்  கோமோரின்' என்று அந்நாட்களில் அழைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் சங்கமிக்கும் இடத்தில் பேரழகே உருவாய் காச்தியளித்துக் கொண்டிருக்கிறது. இதன் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் திருநெல்வேலி மாவாட்டமும், வடமேற்கு மற்றும் மேற்கு திசையில் கேரள மாநிலமும் அமைந்திருக்கின்றன. கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரம் கன்னியாகுமரியிலுருந்து ஏறக்குறைய 85 km தொலைவில் அமைந்துள்ளது.

கோயில்களும்! கடற்கரைகளும்!

கலை மற்றும் பண்பாடுகளில் நாட்டம் இல்லாதவர்களுக்கு நிச்சயம் கன்னியாகுமரி உகந்த இடம் அல்ல. ஆயினும் கன்னியாகுமரியிலுள்ள  கோயில்களும் கடற்கரைகளும் பல சுற்றுலாப் பயணிகளையும் புனித பயணம் செல்பவர்களையும் கவரும் வண்ணம் உள்ளன.

விவேகானந்தர் பாறை, விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, வட்டகோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, வாவத்துறை, உதயகிரி கோட்டை மற்றும் காந்தி அருங்காட்சியகம், ஆகியவைகள் தான்   இங்குள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்கள்.

இங்குள்ள முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் கன்னியாகுமரி கோயில், சித்தாறல் மலைக்கோயில் மற்றும் ஜெயின் நினைவுச் சின்னங்கள், நாகராஜ கோயில், சுப்பிரமணிய கோயில், திருநந்திக்கரை குகைக்கோயில் ஆகியவை அடங்கும்.

குடும்பம் மற்றும் நண்பர்களோடு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கவரப்படுவது இங்குள்ள கடற்கரைகளாலே. இதில் சங்குத்துறை, தேங்காப்பட்டினம் மற்றும் சொத்தவிளை கடற்கரைகள் மிகவும் பிரபலம்.

கன்னியாகுமரியின் வரலாறு

சமயம் மற்றும் கலைகளுக்கு மட்டும் பேர் போனதல்ல கன்னியாகுமரி. சில ஆண்டு காலங்களாக தொழில் மற்றும் வர்த்தகத்துக்கும் புகழ் பெற்று விளங்குகிறது.

கன்னியாகுமரி பாண்டியர்கள், சோழர்கள், நாயகர்கள், சேரர்கள் போன்ற பல அரச சம்ராஜ்யங்களால் ஆளப்பட்டவை. இங்குள்ள கோயில்களும், அவற்றின் கட்டிடக்கலையும் இந்த சாம்ராஜ்யங்களின் கலை மற்றும் நாகரிகத்துக்கு மிகச் சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன.

பின்நாளில் கன்னியாகுமரி வேணாடு அரசவம்சம் கீழ் ஆளப்பட்டது. அவ்வேளையில் கன்னியாகுமரியின் தலைநகரம், பத்மநாபபுரத்தில் இருந்து வந்தது.

1729-1758 இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்த வேணாட்டின் அரசரான அனிழம் திருநல் மார்த்தாண்ட வர்மாவால்  உருவாகப்பட்டது தான் திருவாங்கூர் அரசு. அதில் தெற்கு திருவாங்கூர் இந்நாளில் கன்னியாகுமரி மாவட்டதின் கீழ் அமையப்பெற்றிருக்கிறது.

பரவர் ராஜாங்கத்திற்கு பிறகு, இந்தியா 1947-ல் சுதந்திரம் அடையும் வரை, கன்னியாகுமரி வெள்ளையர்களின் துணையோடு திருவாங்கூர் சமஸ்தானத்தால் ஆளப்பட்டது. பின் 1947-ல், திருவாங்கூர் சமஸ்தானத்தின் தனி ஆளுமை  முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

மக்களும் பண்பாடும்

ஆயிரம் ஆண்டு காலமாக கலை, பண்பாடு, பொருளாதாரம் மற்றும் வரலாறு ஆகியவற்றுக்கு பேர்போன்றதாக விளங்குகிறது கன்னியாகுமரி. கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் ஹிந்து மதங்களின் கலவையாக கன்யாகுமரி விளங்குவதால் இங்கே கலவையான பண்பாடை பார்க்கக்கூடும்.

கன்னியாகுமரி பல புனித பயணம் மேற்கொள்பவர்களை கவர காரணம், பல நூற்றாண்டுகளாக இங்கே கொட்டிக்  கிடக்கும் வளமான பாரம்பரிய கலாச்சாரமே. ஏராளமான அழகிய கிறிஸ்துவ ஆலயங்கள், கோயில்கள், கற்சிலைகள் மற்றும் மதத்தூண்களை இங்கே கண்டு களிக்கலாம்.

பலதரப்பட்ட கலாச்சாராங்களால் ஆனவை தான் கன்னியாகுமரி என்பதற்கு இங்கே இருக்கும் கட்டுமானங்கள், கலைகள் மற்றும் சமையற்கலைகளே சான்று. கன்னியாகுமரியின் பாரம்பரிய நடனம் கதகளியை போல் புகழ் பெற்றது.

இங்கே கொண்டாடப்படும் திருவிழாக்களில்  முக்கியமானதாக கருதப்படுவது  கதோலிக் ஆலயங்களின் புனித ஆண்டு விழா, நவராத்திரி மற்றும் சித்ரா பௌர்ணமி.

கன்னியாகுமரியில் வாங்கக் கிடைக்கும் பொருட்கள்

கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கி மகிழ்வோருக்கு உகுந்த இடமல்ல கன்னியாகுமரி. இருப்பினும் இங்கே நம் மனம்  விரும்பியவர்களுக்கான நினைவுக் குறிப்புகள் வாங்க பல கடைகள் உண்டு.

பலவிதமான கடல் சிப்பிகளும், சிப்பிகளை வைத்து உண்டாக்கிய ஆபரணங்கள் மற்றும் நினைவுக் குறிப்புகளும் கிடைக்கும். உள்ளூர் மக்களால் செய்து விற்கப்படும் கைவினைப் பொருட்களும் ஏராளமாக கிடைக்ககூடும்.

இந்த அழகிய பொருட்கள் பிரம்பு, மூங்கில் மற்றும் மரத்தினால் செய்யப்பட்டவைகள். இவைகளை வாங்கி நம் வீட்டை அலங்கரிக்கலாம் அல்லது உற்றார், உரிவினர் மற்றும் நண்பர்களுக்கு பரிசளிக்காம்.

பல விதமான கடல் சிப்பிகள் மற்றும் பல வண்ணக் கடல் மண்ணால் செய்யப்பட்ட சிறிய வகை ஆபரணங்களையும் வாங்கலாம். இண்டோ ப்ராடக்ட்ஸ், தமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் சேல்ஸ் எம்போரியம் மற்றும் தமிழ்நாடு கிராப்ட்ஸ்  அண்ட் பூம்புகார் ஆகியவை கன்னியாகுமரியிலுள்ள சில முக்கிய கடைகள்.

பலதரப்பட்ட ஆடை வகைகள் மற்றும் கைவினை பொருட்களை இங்கே வாங்கலாம். தெரு ஓரங்களில் விற்கப்படும் பொருட்களை மலிவான விலைக்கு வாங்கலாம்.

சாப்பாட்டு பிரியர்களுக்கு - கன்னியாகுமரியின் உணவு வழக்கம்

கன்னியாகுமரியில் புகழ் பெற்ற உணவு வகைகள் என்றால் அது கடல் உணவுகள் தான். காரசாரமான உணவுகள் இங்கே அதிகம் கிடைக்கும். தேங்காய் சேர்க்காத உணவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, தேங்காயின் பயன்பாடு அதிகமாக இருக்கும்.

பெரும்பாலான உணவகத்தில் எல்லா வகையான தெற்கிந்திய உணவு வகைகளும் கிடைக்கும். இதில் இட்லி, வடை, தோசை மற்றும் ஊத்தாப்பம் அடங்கும். இது போக சில சைனீஸ், ராஜஸ்தானி மற்றும் குஜராத்தி வகை உணவகங்களும் இருக்கின்றன.

கன்னியாகுமரியை அடைய

கன்னியாகுமரியின் மிக அருகில் இருக்கும் விமான நிலையம் திருவனந்தபுரத்தில் உள்ளது. சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்திலிருந்து டாக்ஸி, ரயில் அல்லது பேருந்து மூலியமாக கன்னியாகுமரியை வந்தடையலாம். ஊருக்குள் சுற்றித்திறிய ஆட்டோ, தனியார் டாக்ஸி அல்லது உள்ளூர் பேருந்தை பயன்படுத்தலாம்.

கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல உகுந்த நேரம்

கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல உகுந்த நேரம் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை. இந்த இடைப்பட்ட காலத்தில் இனிமையான பருவநிலையை அனுபவிக்கலாம். ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலானாது மழைக்காலம் என்பதால் இந்நேரத்தில் செல்வதை தவிர்ப்பது நல்லது.

கன்னியாகுமரி சிறப்பு

கன்னியாகுமரி வானிலை

சிறந்த காலநிலை கன்னியாகுமரி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கன்னியாகுமரி

  • சாலை வழியாக
    தரை மார்க்கமாக கன்னியாகுமரி வருவதற்கு வசதியான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி வந்தடைய இந்தியாவிலுள்ள பல பெருந்நகரங்களுடன் தேசிய நெடுஞ்சாலைகளின் இணைப்பு நன்றாக செயல்படுகின்றன. அதே போல் தெற்கிந்திய நகரங்களான மதுரை, திருவனந்தபுரம், ராமேஸ்வரம், திருச்செந்தூர், கொடைக்கானல், கோயம்புத்தூர், பழனி, கொச்சி, தேக்கடி, ஊட்டி, திருநேல்வெல்லி, நாகர்கோயில், தூத்துக்குடி மற்றும் குற்றாலம் அகியவையுடன் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு மிக சிறப்பாக செயல்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கன்னியாகுமரிக்கு, விமான சேவையை போலவே ரயில் சேவையும் மிக நன்றாக இருப்பதால், ரயில் மூலமாகவும் கன்னியாகுமரியை வந்தடையலாம். கன்னியாகுமரிக்கு இந்தியாவிலுள்ள பல பெருநகரங்களிலிருந்து ஏகப்பட்ட விரைவூர்தி மற்றும் அதிவேக ரயில்கள் இயங்குகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கன்னியாகுமரியை விமான சேவை மூலம் வந்தடைய, 89 km தொலைவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையம் மூலம் வரலாம். இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை கொண்டது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat