Search
  • Follow NativePlanet
Share

கார்கில் - இமையமலையின் அரவணைப்பில்! 

32

`அகாக்களின் பூமி' என அழைக்கப்டும் `கார்கில்',  ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் `லடாக்' பகுதியில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். `ஷியா' பிரிவு முஸ்லிம்கள் இப்பகுதியை கைப்பற்றி வாழ்ந்து வந்ததால் இது `கார்கில்' என பெயர் பெற்றது.

கார்கில் இந்தியா-பாக்கிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டிற்கு மிக அருகில் காஷ்மீர் பள்ளத்தாக்கை நோக்கியவாறு அமைந்துள்ளது. ஸ்ரீநகர், கார்கிலில் இருந்து 205 கி. மீ. தொலைவில் உள்ளது. இந்தியாவும் பாக்கிஸ்தானும் இப்பகுதியை மையப்படுத்தியே தமக்குள் 1999-ல் சண்டையிட்டுக் கொன்டனர். இது கார்கில் யுத்தம் என அழைக்கப்படுகின்றது.

கார்கில் என்பது `கார்', மற்றும் `ரிகில்' என்ற இரு வார்த்தைகளின் தொகுப்பாகும். கார் என்பது கோட்டையையும், ரிகில் என்பது மையப்பகுதியையும் குறிக்கும். இவ்விரு சொற்களும் ஒத்திசையும் போது, கார்கில் என்கிற சொல்லிற்கு அழகான பெயர் காரணத்தை தருகின்றன.

கார்கில் இந்தியா-பாக்கிஸ்தானிற்கு இடையே உள்ள ஒரு கோட்டை போன்ற நிலப்பரப்பு என்கிற  தோற்றத்தை நமக்குள் உருவாக்குகின்றது. கார்கில், மடாலயம், சிறுநகரம், மற்றும் பசுமை பள்ளத்தாக்கிற்கு புகழ் பெற்றது.

இப்பகுதியில் சில சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் புத்த மதம் சார்ந்த மடாலயங்கள் உள்ளன. ஷானி, முல்பெகே, மற்றும் ஷார்கோலோ மடாலயங்கள் இவற்றுள் முக்கியமானவை.

மலைப்பகுதியில் உள்ள முல்பெகே மடாலயத்தின் 9 மீ உயரம் உள்ள `மைத்ரேய புத்தர்' சிலை சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கின்றது. இது உலகப் புகழ் பெற்ற `சிரிக்கும் புத்தர்' எனவும் அழைக்கப்படுகின்றது.

ஷான்ஸ்கர், கார்கிலின் துணை மாவட்டமாகும். ஏராளமன சுற்றுலா பயணிகள் ஷான்ஸ்கர் பகுதிக்கு ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். கடும் பனிப்பொழிவு காரணமாக வருடத்தின் 8 மாதங்களுக்கு,  ஷான்ஸ்கர் நாட்டின் பிற பகுதிகளிருந்து தனிமைப்படுத்தப்பட்டு காணப்படும்.

சுமார் 150 துறவிகள் இம் மடாலயத்தில் தங்கியுள்ளனர். `ரங்டும்',` ஷார்கோலோ', மற்றும் `புக்தல்' மடாலயங்கள் இப்பகுதியில் உள்ள புகழ் பெற்ற மடாலயங்கள் ஆகும்.

ஸ்ரீநகருக்கு அருகில் உள்ள கார்கிலை சாலை வழியே அனுகுவது மிகவும் எளிது. ஸ்ரீநகரில் உள்ள புகழ் பெற்ற ஷேக்-உல்-அலாம் விமான நிலையம் நாட்டின் பிற நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகருக்கு, டில்லி, மும்பை, சிம்லா, மற்றும் சண்டிகாரிலிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. கார்கிலுக்கு அருகில் உள்ள விமான நிலையம் `ஷேக்-உல்-அலாம்' விமான நிலையமாகும்.

ஜம்மு தாவி  ரயில் நிலையம் கார்கிலிலிருந்து 540 கி. மீ. தொலைவில் உள்ளது. ஜம்மு தாவிக்கு சென்னை, திருவனந்தபுரம் உட்பட நாட்டின் பிற பகுதிகளிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கார்கில் இமயமலையில் அமைந்துள்ளதால், `ஆர்டிக்' மற்றும் `பாலைவன' சீதோஷ்ன நிலையை பெற்றுள்ளது. பனிக்காலத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக கார்கிலுக்கான அனைத்து வழிகளும் மூடப்படுவிடும்.

இக்காலத்தில் வெப்பநிலை -48° C அளவிற்கு சென்று விடுவதால்  உயிர் வாழ்வது மிகவும் சிரமமாகும். கார்கிலில் வெயிற்காலம் மிகவும் இதமானது. மே முதல் ஜீன் வரை உள்ள இரண்டு மாதங்கள் கார்கில் செல்வதற்கு ஏற்ற காலமாகும்.

கார்கில் சிறப்பு

கார்கில் வானிலை

சிறந்த காலநிலை கார்கில்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கார்கில்

  • சாலை வழியாக
    சுற்றுலா பயணிகளுக்காக ஸ்ரீநகர் மற்றும் லேவில் இருந்து நேரடி பேருந்துகள் கார்கிலுக்கு இயக்கப்படுகின்றன. ஸ்ரீநகருக்கு, ஜம்மு, சண்டிகர், தில்லி, பால்கன், மற்றும் லே விலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலா பயணிகள் ஜம்மு & காஷ்மீர் மாநில சாலை போக்குவரத்து கழகம் அல்லது JK & KSRTC, பஸ் சேவைகளை பெற முடியும். சுற்றுலா பயணிகள் ஜீப், டாக்சி மற்றும் மினி வண்டிகளை தேர்வு செய்யலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ஜம்மு தாவி ரயில் நிலையம் கார்கிலிலிருந்து 540 கி. மீ. தொலைவில் உள்ளது. ஜம்மு தாவிக்கு சென்னை, திருவனந்தபுரம், தில்லி, பெங்களூரு உட்பட நாட்டின் பிற பகுதிகளிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. சுற்றுலா பயணிகள் ரயில் நிலையத்தில் இருந்து கார்கிலை அடைய டாக்சிகள் அல்லது ஜீப்புகளை தேர்வு செய்யலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ஸ்ரீநகர் விமான நிலையம் கார்கிலில் இருந்து 206 கி.மீ. தொலைவில் உள்ளது. இது புது தில்லி, மும்பை, சிம்லா, மற்றும் சண்டிகர் போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் கார்கிலை அடைய விமான நிலையத்தில் இருந்து வண்டிகளை வாடகைக்கு அமர்த்தி கொள்ள முடியும். சர்வதேச பயணிகள், தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தி கார்கிலை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu