Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கரூர் » வானிலை

கரூர் வானிலை

மழைக்காலத்திற்கு பிறகு அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும் குளிர்க்காலமே கரூருக்கு பயணம் செய்ய சிறந்த காலம். இந்த காலகட்டத்தில் வானிலை மிதமாகவும், இனிமையாகவும்இருக்கும் என்பதால் பயண அனுபவம் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை) : கரூர் நகரின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 37 டிகிரியும், குறைந்தபட்சமாக 32 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.

மழைக்காலம்

மழைக்காலமான ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை கரூர் மிதமான மழைப்பொழிவை பெறுகின்றது. அணல்பறக்கும் வெப்பத்தில் இருந்து நிம்மதி அளிக்கும் மழைப்பொழிவுகள் வரவேற்கத்தக்கனவாக இருக்கின்றன. மழைக்காலத்திற்கு பிறகு வானிலை முற்றிலும் இனிமையானதாக இருக்கின்றது.

குளிர்காலம்

டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை கரூரில் குளிர்க்காலம் நிலவுகின்றது. ஆண்டின் இந்த பகுதி மிகவும் இனிமையானதாக இருக்கின்றது. தட்பவெப்பம் 17° C முதல்  28° C வரை இருக்கிறது. இந்த பட்டணத்திற்கு வர இது ஒரு சிறந்த காலம்.