Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காசர்கோட் » வானிலை

காசர்கோட் வானிலை

காசர்கோட் நகரில் செப்டம்பரிலிருந்து, அக்டோபர் வரை வெப்பநிலை மிகவும் இதமானதாக இருக்கும். எனவே இந்த காலங்களில் காசர்கோட் மாவட்டத்தை சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் சிறப்பானது.

கோடைகாலம்

காசர்கோட் மாவட்டத்தின் மார்ச் மற்றும் மே மாதங்களில் 20 முதல் 30 டிகிரி வரை வெப்பநிலை நிலவும். அதேவேளையில் மே மாதம்தான் மிகவும் வெப்பம் மிகுந்த மாதமாக கருதப்படுகிறது. எனவே பயணிகள் சுட்டெரிக்கும் கோடை காலத்தில் காசர்கோட் மாவட்டத்துக்கு சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

காசர்கோட் மாவட்டத்தின் மழைக் காலம் ஜூன் மாதத்தில் ஆரம்பித்து ஆகஸ்ட் மாதத்தில் முடிவடையும். இந்த காலங்களில் சராசரியாக 3500 மில்லிமீட்டர் அளவு காசர்கோட் மாவட்டத்தில் மழை பதிவாகும். அதிலும் குறிப்பாக தென் மேற்கு பருவக்காற்றின் காரணமாக ஜூன் மாதத்தில் காசர்கோட் மாவட்டத்தில் கன மழை கொட்டித் தீர்க்கும்.

குளிர்காலம்

காசர்கோட் மாவட்டத்தின் பனிக் காலம் டிசம்பரில் தொடங்கி மார்ச் மாதத்தில் முடிவடையும். இந்த காலங்களில் காசர்கோட் மாவட்டத்தின் வெப்பநிலை அதிகபட்சமாக 25 டிகிரியும், குறைந்தபட்சமாக 18 டிகிரியுமாக பதிவாகும். அதோடு மிகவும் இதமான வானிலை நிலவும் பனிக் காலங்களில் காசர்கோட் மாவட்டத்தை சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் அலாதியானது.