Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கசௌலி » வானிலை

கசௌலி வானிலை

சுற்றுலாப்பயணிகள் வருடத்தின் எந்த நாளிலும் இந்த அழகிய கசௌலி நகரத்திற்கு பயணம் மேற்கொள்ளலாம். பிப்ரவரி மாதத்தில் கசௌலி நகரத்தில் குளிர்காலத்திருவிழா எனும் பிரசித்தமான உள்ளூர் திருவிழாவும் சிறப்பாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை) : கசௌலி பகுதியில் மார்ச் மாதத்தில் துவங்கி ஜூன் மாதம் வரை கோடைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக பகலில் 28° C வெப்பநிலையும், இரவில் 14°C வெப்பநிலையும் நிலவுகிறது. பொதுவாக கோடைக்காலத்தில் கசௌலி பகுதி மித உஷ்ணமான பகல்பொழுதையும், குளுமையான இரவுப்பொழுதையும் கொண்டுள்ளது.

மழைக்காலம்

(ஜூலை முதல் ஆகஸ்ட் வரை) : கசௌலி பகுதியில் ஜுலை மாதத்தில் துவங்கும் மழைக்காலம் ஆகஸ்ட் மாதம் வரை நீள்கிறது. மழைக்காலத்தில் குறைவான மழைப்பொழிவையே இப்பகுதி பெறுகிறது. இனிமையான சூழல் காணப்படுவதால் பயணிகள் மழைக்காலத்தில் இப்பகுதிக்கு விஜயம் செய்வதை விரும்புகின்றனர்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : கசௌலி பகுதியில் நவம்பர் மாதத்தில் குளிர்காலம் துவங்குகிறது. பனிப்பொழிவு காணப்படும் இந்த குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கிறது. இக்காலத்தில் 5° C முதல் 14° C வரை வெப்பநிலை நிலவுகிறது.