Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கௌஸனி » வானிலை

கௌஸனி வானிலை

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலமே கௌஸனிக்கு சுற்றுலா செல்ல உகந்த காலமாக கருதப்படுகிறது. 

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): கௌஸனியின் கோடைகாலம், மார்ச் மாதத்தில் தொடங்கி, மே மாதத்தில் முடிவடைகிறது. கோடையில் கௌஸனியின்  வெப்பநிலை 11 ° C முதல் 25 ° C   வரை வேறுபடுகிறது.  கோடை காலத்தில் கௌஸனியின் வானிலை மிகவும் இனிமையாக இருக்கும். எனவே, கௌஸனிக்கு சுற்றுலா செல்வதற்கு கோடை காலமே மிகவும் சிறந்தது.

மழைக்காலம்

(ஜூன் முதல் ஆகஸ்ட் வரை): இங்கே ஜூனில்  தொடங்கும் பருவமழை ஆகஸ்ட்  வரை நீடிக்கிறது. இந்த காலங்களில் கௌஸனி, மிதமான மழைப்பொழிவை பெறுகிறது. எனினும், சாலைகள் இந்த பருவத்தில் வழுக்கும் நிலையில் காணப்படும். ஆகவே மலைக்காலங்களில் கௌஸனிக்கு சுற்றுலா செல்வது அவ்வளவு சரியான தேர்வு அல்ல.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை): அக்டோபர் மாதத்தில்  தொடங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கின்றது. இக்காலத்தின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 2° C மற்றும் 15 ° C. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இங்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்படுவதுண்டு.