Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கெம்மனகுண்டி » வானிலை

கெம்மனகுண்டி வானிலை

கெம்மனகுண்டியின் கவர்ச்சிகள் ஒவ்வொன்றையும் ஒன்று விடாமல்  ரசிக்க விரும்பும் பயணிகள் செப்டம்பரிலிருந்து, மே மாதம் வரையிலான காலங்களில் கெம்மனகுண்டிக்கு சுற்றுலா வருவதே சிறப்பாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : கெம்மனகுண்டியில் கோடை வெயில் 34 டிகிரிக்கும் குறைவாகவே இருக்கும். இதன் காரணமாக இந்தக் காலங்களில் இங்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை பார்க்கலாம்.

மழைக்காலம்

(ஜூன் முதல் ஆகஸ்ட் வரை) : கெம்மனகுண்டியின் மழைக் காலங்களில்  மிதமான மழையே பதிவாகும். ஆகையால் அருவிகளின் உன்னதமான அழகை ரசிக்க அதன் மழைக் காலமே சரியான தேர்வு.

குளிர்காலம்

(செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை) : கெம்மனகுண்டியின் பனிக் கால வெப்பநிலை 29 டிகிரி முதல் 12 டிகிரி வரை பதிவாகும்.