கின்னாரில் உள்ள கோத்தி என்னும் கிராமத்தில் தான் புகழ்பெற்ற மத வழிபாட்டுத்தலமான சாண்டிகா கோவில் உள்ளது. சுவாங் சாண்டிகா என்ற மற்றொரு பெயரிலும் வழங்கப்படும் இந்த பெண் கடவுள் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படுவதால், இவர் உள்ளூர் மக்களால் மிகவும் பயபக்தியுடன் வணங்கப்படுகிறார்.
தங்கத்தால் செய்யப்பட்டிருக்கும் இந்த சிலை ஆர்க் ஒன்றில் அமர்ந்திருக்குமாறு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை மக்கள் வழிபடும் போது, அதனை மேலே மற்றும் கீழே என்று நான்கு பேர் ஆட்டி வருவார்கள்.
புராணகதைகளின் படி சாண்டிகா என்பது அசுராரான 'தேவ்தா' அல்லது அரசரின் 18 குழந்தைகளில் ஒருவராவார். அவர் கின்னார் பகுதியை ஆண்டு வந்த போது, அவருடைய மூத்த மகளான சாண்டிகா கின்னார் பகுதியின் இதயமாக பரவலாக அறியப்படும் சாய்ராங் பகுதியை நிர்வகித்து வந்தார்.
சாண்டிகா தன்னுடைய சசோதரர் சாகோன் மகேஷ்வரருடைய உதவியுடன் அசுரன் ஒருவனுடன் போரிட்டு இந்த பகுதியை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக புராணக் கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications