கின்னார் மாவட்டத்தில் உள்ள சாங்கோ என்னும் கிராமத்தில் உள்ள சாங்கோ கோவில்கள் பல்வேறு சுற்றுலாப் பயணிகளையும் தன்னகத்தே ஈர்க்கும் இடமாக உள்ளது. இந்த கிராமம் அதன் அழகிய நில அமைப்புகள், கோவில்கள் மற்றும் பார்த்தவுடன் சாப்பிடத் தோன்றும் ஆப்பிள்களுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும்.
இந்த கிராமத்தில் உள்ளவர்களில் பெரும்பாலோர் புத்த மதத்தையும் மற்றவர்கள் இந்து மதத்தையும் கடைபிடிக்கிறார்கள். கியால்பா, யால்சா மற்றும் டாப்லா ஆகியவை இங்கே வழிபடப்படும் சில இந்து தெய்வங்கள் ஆகும்.
இங்கு மூன்று முக்கிய கோவில்கள் உள்ளன, அவற்றில் ஒன்று லோவர் சாங்கோவில் உள்ளது. இந்த கோவிலின் சிவப்பு நிற சுவர்களை தொலைவிலிருந்தே பார்க்க முடியும். அழகிய சுவரோவியங்கள், களிமண் சிற்பங்கள் மற்றும் பெரிய பிரார்த்தனை சக்கரம் ஆகியவற்றை இங்குள்ள மற்றொரு கிராம கோவிலில் காண முடியும்.
இந்த இரு கோவில்களுக்கும் இடையிலுள்ள பாதையில் புத்தரிடம் ஞானோதயம் பெற்ற அவலோமிதேஸ்வரா என்ற சிற்பம் பெரிய கற்களில் வடிக்கப்பட்டுள்ளதை காணலாம்.
மேல் சாங்கோவில் உள்ள மற்றுமொரு கோவில் இந்த மூன்றில் மிகவும் அழகான கோவிலாகும். சுற்றுலாப்பயணிகள் பிரார்த்தனைக் கூடம், விருந்தினர் அறைகள் மற்றும் நூலகம் ஆகியவை இந்த கோவிலுக்குள் இருப்பதை காணலாம்.



Click it and Unblock the Notifications