ராங்ரிக் டுங்மா காம்ப்ளக்ஸ் என்ற பெயரில் அழைக்கப்படும் சாரங் கோவில், கின்னாரிலுள்ள சாரங்கில் உள்ளது. 11வது நூற்றாண்டைச் சேர்ந்த இந்த ராங்ரிக் டுங்மா என்ற தெய்வமானது புத்தருக்கு முந்தைய காலத்தை சேர்ந்ததாக கருதப்படுகிறது.
குதிரையில் ஏறியுள்ளவாறு உள்ள சிறிய உலோக சிலை ஒன்று இந்த கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், மைத்ரேயா மற்றும் புத்தரின் சிலைகளையும் இந்த கோவிலுக்குள் சுற்றுலாப் பயணிகள் காண முடியும்.
இங்குள்ள களிமண் சிலைகள் சுற்றுலாப் பயணிகளின் ஆர்வத்தை மிகவும் தூண்டக்கூடியவைகளாக இருக்கும். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஐவரி தொகுப்புகளையும், உடைவாட்கள் மற்றும் எலும்பினால் செய்யப்பட்ட கைப்பிடியையுடைய கத்திகள் மற்றும் சில சுவரோவியங்களையும் காண முடியும்.
இந்த கோவிலை கொள்ளையடிப்பதற்காக கொள்ளையர்கள் வந்த போது, அதன் வாயிலில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் குதிரை கனைப்பதைப் போன்ற சத்தத்தை எழுப்பியதாகவம் நம்பப் படுகிறது. அந்த சத்தம் கேட்டு பயந்து போய் ஓடி விட்டதால் இந்த கோவில் கொள்ளையர்களால் சூறையாடப் படுவதில் இருந்து தப்பியதாக நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications