இந்த பகுதியின் இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கான ஹங்க்ராங் பள்ளத்தாக்கு, திபெத் மற்றும் ஸ்பிட்டி-ன் எல்லைப்பகுதிகளையொட்டி அமைந்துள்ளது. எட்டே கிராமங்களை உடைய இந்த பள்ளத்தாக்கிலுள்ள கிராமங்களின் மக்கள் தொகையை விரல் விட்டு எண்ணி விட முடியும்.
இந்த பகுதிகள் பாறைகள் மற்றும் தரிசான மேட்டு நிலங்களையே அதிகமாக பெற்றுள்ளதால் இங்குள்ள மக்களின் முக்கியமான தொழிலாக கால்நடை வளர்ப்பு உள்ளது. ஒழுங்கற்ற மலைகள் அதிகளவில் உள்ள பகுதியாக இருப்பதால் இந்த இடங்களில் மலையேற்றம செய்வது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும்.
மலையேற்றத்தில் நன்கு அனுபவம் வாய்ந்தவர்களையும் கூட திணறச் செய்பவையாக இந்த மலைகள் உள்ளன. ஆனாலும் இந்த பள்ளத்தாக்கு மலையேறும் விளையாட்டிற்காகவும், பறவைகளை பார்வையிட தகுந்த இடமாகவும் விளங்குகிறது.



Click it and Unblock the Notifications