Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கின்னார் » ஈர்க்கும் இடங்கள் » லிபா-ஆஸ்ரங் சரணாலயம்

லிபா-ஆஸ்ரங் சரணாலயம், கின்னார்

35

4000 முதல் 5022மீ உயரத்தில் கின்னாரில் சுமார் 30.89 ச.கிமீ பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த லிபா-ஆஸ்ரங் சரணாலயம், முதலில் 1962 ஆண்டிலும் மற்றும் இரண்டாவதாக 1974 ஆண்டிலும் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படது.

இந்த சரணாலயம் மிகவும் பெரிய பரப்பளவிலும், மற்றும் சமதளப் பரப்பிலும் உள்ளது. மேலும் இதன் சில பகுதிகள் ஒன்றுக்கும் உதவாத வகையில் குளிர் பாலைவனமாகவும் இருக்கின்றன.

அடர்ந்த வனம் போன்று காட்சியளிக்கும் இந்த சரணாலயம் குள்ளமான ஜுனிபெர் புதர் வகைகள், வறண்ட அல்பைன் புதர்கள், மேற்கு இமாலயத்தின் வெப்பமண்டல காடுகள், ஊசியிலைக் காடுகள், வறண்ட ஊசியிலைக் காடுகள், மற்றும் வறண்ட அகன்ற இலைகளைக் கொண்ட மரங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

இந்த சரணாலயத்தில் நீல ஆடுகள், பழுப்பு கரடிகள், சிறுத்தைகள், ஐபெக்ஸ் என்ற மலையாடுகள், கஸ்தூரி மான்கள், இமாலய கருப்பு மான்கள், கோரல்கள் மற்றும் யாக் எருமைகளை காணலாம்.

இந்த சரணாலயத்தில் வசிக்கும் பெரும்பாலான விலங்குள், ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில், வெளியே சுற்றிக் கொண்டிருக்குமாதலால் இந்த காலகட்டங்களில் சுற்றுலாப்பயணிகள் இங்கு வருவது சிறந்த அனுபவத்தைத் தரும். இங்கு வருவதற்கு சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினரிடம் முன் அனுமதியைப் பெற வேண்டும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed

Near by City