Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கின்னார் » ஈர்க்கும் இடங்கள் » மகேஸ்வர் கோவில்

மகேஸ்வர் கோவில், கின்னார்

35

கின்னார் மாவட்டத்தின் சுங்ராவில் உள்ள புகழ் பெற்ற மதம் சார்ந்த இடம் தான் மகேஸ்வர் கோவில். இந்த கோவிலின் இரு பக்கங்களிலும், மரங்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ள அலங்கார வேலைப்பாடுகள் மிகவும் பெயர் பெற்றவையாகும்.

இந்த கோவிலின் முற்றமும் மற்றும் இதர அலங்கரிக்கப்பட்ட முகப்புகளும், அற்புதமாக செதுக்கப்பட்டு இங்கு வாழ்ந்த முந்தைய தலைமுறை மக்களின் கலைநயத்தை இன்றும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

இங்கு கருத்தாழத்துடன் செதுக்கப்பட்டுள்ள இந்து தெய்வங்களின் சிலைகள் தொல்பொருள் ஆய்வில் ஆர்வமுடையவர்களுக்கு விருந்தாக அமையும். இந்த கோவிலின் கிழக்கு சுவற்றில் இந்து கடவுளான மகா விஷ்ணுவின் அவதாரங்களும் மற்றும் இந்து மதத்தின் 12 ராசிக்குறியீடுகளும் காட்சியளிக்கின்றன.

இந்த கோவிலின் தூண்களின் மேல் பகுதியில் செய்யப்பட்டுள்ள அலங்கார வேலைப்பாடுகள் பார்ப்பவரை மயக்கும் அழகை கொண்டிருக்கின்றன. இந்த கோவிலுக்கு அருகிலேயே எட்டாவது நூற்றாண்டைச் சேர்ந்த மற்றொரு கற்கோவிலும் உள்ளது.

நாட்டுப்புற கதைகளில் கிடைக்கும் குறிப்புகளின் படி, இந்திய இதிகாசமான மகாபாரதத்தில் வரும் பீமர், சுங்ர மகேஷ்வரர் கடவுளை ஒருமுறை தாக்கினார். இந்த தாக்குதலின் போது பீமர் ஒரு மிகப் பெரிய கற்பாளத்தை சட்லெஜ் நதியைச் தாண்டியுள்ள மலையிலிருந்து இந்த கோவிலின் மீது எறிந்ததாக சொல்லப்படுகிறது.

மகேஷ்வர கடவுள் இந்த கற்பாளத்தை மற்றொரு பக்கத்தில் தூக்கி வீசியதாகவும், அதுதான் இப்போதும் இந்த கோவிலுக்கு அருகிலுள்ள சாலையில் கிடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri

Near by City