பஸ்பா பள்ளத்தாக்கில் உள்ள மத்தி கோவில் கின்னார் மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க கோவில்களில் ஒன்றாக உள்ளது. மத்தி தேவியானவர் இந்த இடத்திற்கு கடுமையான இடர்பாடுகளுக்கிடையில் பயணம் செய்து வந்து தனது வசிப்பிடமாக தேர்ந்தெடுத்துக் கொண்டதாக இங்கு வழங்கப்பட்டு வரும் நாட்டுப்புற கதைகளில் சொல்லப்படுகிறது. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே பக்தர்களும் இங்கு வருகிறார்கள்.
இங்கு மூன்று பெண் தெய்வங்களின் கோவில்கள் உள்ளன, அவற்றில் முதன்மையான கோவிலை இந்த இடத்தின் பூர்வகுடி மக்களான கார்வால் இனத்தவர் 500 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டியுள்ளனர்.
இந்த தெய்வம் அமர்ந்திருக்கும் இடம் வால்நட் மரத்தினால் உருவாக்கப்பட்டு, துணிகளால் சுற்றிலும் மூடப்பட்டிருக்கிறது மற்றும் இந்த தெய்வத்தின் கிரீடமாக யாக் எருமையின் வாலிலிருந்து எடுக்கப்பட்ட மயிர்கற்றை பயன்படுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications