கின்னாரில் ஓடும் சட்லெஜ் நதியின் இடப்பக்க கரையில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 3591மீ உயரத்தில் அமைந்துள்ள அழகிய கிராமம் தான் மூராங். கல்பாவில் இருந்து 39 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம் அதன் வாதுமை கொட்டை பழத்தோட்டங்களுக்காக சுற்றுலாப்பயணிகளிடம் புகழ் பெற்ற இடமாக இருக்கிறது.
இயற்கையழகிற்காக புகழ் பெற்ற இந்த இடத்தில், இந்திய இதிகாசமான மகாபாரத்தில் வரும் பாண்டவர்களால் கட்டப்பட்டது என்று சொல்லப்படும் ஒரு பழமையான கோட்டையும் உள்ளது.
இந்த கோட்டையிலிருந்து சட்லெஜ் நதி ஓடும் அழகிய காட்சியை காண முடியும். இந்த கோட்டையின் முதன்மை வாயிலை தனியாக பிரிந்து வரக்கூடிய ஏணியின் வழியாக எளிதில் அடைய முடியும்.
உள்ளூர் தெய்வங்களுக்காக ஏற்படுத்தப் பட்டுள்ள உர்மிங் என்றழைக்கப்படும் மூன்று அமைப்புகள் இங்குள்ளன. அவை த்வாரிங், கார்மங் மற்றும ஷில்லிங் நகரங்களில் வைக்கப் பட்டுள்ளன.
எப்பொழுதும் கோட்டைக்குள்ளேயே வைக்கப்பட்டிருக்கும் இந்த தெய்வத்தின் ஆர்க் அமைவிடமானது, விழாக்காலங்களில் நகரங்களுக்கு கொண்டு செல்லப்படும். இந்த தெய்வத்தின் கையிலிருக்கும் ஆர்க்-கானது தங்கம், பித்தளை மற்றும் வெள்ளியால் செய்யப்பட்டும், 18 முகங்கள் அல்லது 'முக்' உடன் உள்ளது. இந்த 18 முகங்கள் மகாபாரதம் நடந்த 18 நாட்களை குறிப்பிடுகின்றன.



Click it and Unblock the Notifications