நாகோ ஏரியானது, கின்னாரில் உள்ள நாகோ என்ற பழமையை பறைசாற்றும் கிராமத்தில் உள்ளது. இது புகழ்பெற்ற ஹங்க்ராங் பள்ளத்தாக்கிலிருந்து 2 கிமீ தொலைவிலேயே உள்ளது.
வருடத்தின் பெரும்பாலான நாட்களில் பனி படர்ந்து இருப்பது இந்த ஏரியின் முக்கியமான சிறப்பம்சமாகும். இந்த ஏரியைச் சுற்றியுள்ள நான்கு அழகிய கோவில்களும் மற்றும் சில மரங்களும் இந்த ஏரியின் அழகை மெருகேற்றுகின்றன.
இங்கு காணப்படும் காலடி போன்ற அச்சு, நிங்மா வகை புத்த சமயத்தில் இரண்டாவது புத்தர் என்று குறிப்பிடப்படும் குரு பத்மசாம்பவருடையது என்றும் சொல்லப் படுகிறது. இந்த இடத்தில் குதிரைகள் மற்றும் யாக் (எருமை) போன்ற விலங்குளையும் உங்களால் காண முடியும்.
இங்குள்ள உள்ளூர் கடவுளான டியோடம் உள்ளூர் மக்களால் வழிபடப்படும் தெய்வமாக உள்ளது. இந்த கிராமம், பார்கியல் சிகரத்திற்கு ஏறுவதற்கான தளமாகவும், தாஷியாங் மடாலயத்திற்கு செல்லும் வழியிலும் உள்ளது.



Click it and Unblock the Notifications