கடல் மட்டத்தில் இருந்து 3115மீ உயரத்தில் பஸ்பா நதியின் கரைகளில் அமைந்துள்ள சிறிய கிராமம் தான் ராக்ச்சம். கல் என்று பொருள்படும் 'ராக்' என்ற வார்த்தையும், 'பாலம்' என்று பொருள்படும் 'சாம்' என்ற வார்த்தையும் சேர்ந்து உருவான வார்த்தைதான் 'ராக்ச்சம்' ஆகும்.
இயற்கையாகவே கற்களாலான பாலம் போன்ற அமைப்பு பஸ்பா நதியின் மேல் அமைந்துள்ளதால் இந்த கிராமம் இப்பெயர் பெற்றதாக உள்ளுர்வாசிகளால் நம்பப்படுகிறது.
இந்த பகுதி முழுமையாக பல்வேறு வகையான மரங்களால் சூழப்பட்டுள்ளது, அவற்றில இமாலயன் செடார் மற்றும் போபத்ரா மரங்களும் அடங்கும். முந்தைய காலங்களில் இந்த மரங்கிளின் பட்டைகளைக் கொண்டுதான் ஓலைச்சுவடிகளை எழுதினார்கள்.



Click it and Unblock the Notifications