3745மீ உயரத்தில் அமைந்துள்ள ரிப்பா, கின்னார் மாவட்டத்தில் மிகவும் பெரிய மற்றும் மக்களடர்த்தி மிகுந்த கிராமமாகும். ‘ரிஸ்பா' மற்றும் 'புர்பானி' கிராமங்களுக்கு நடுவில் அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு 'ரிராங்' என்ற பெயரும் உண்டு.
உள்ளூர் மொழியின் படி 'ரி' என்றால் சில்கோசா என்றும், 'ராங்' என்றால் 'சிகரம்' என்றும் பொருளாகும். இந்த இடத்திற்கு அருகிலுள்ள மற்றொரு கிராமமான 'ரிஸ்பா' அதன் திராட்சை மற்றும் கொடிமுந்திரி பண்ணைகளுக்கும புகழ் பெற்ற இடமாகும்.



Click it and Unblock the Notifications