கின்னாரில் சுற்றுலாப்பயணிகள் அனுபவிக்க ஏற்ற மிகச்சிறந்த சாகச விளையாட்டுகளில் மிகவும் புகழ் பெற்றது மலையேற்றம் தான். இந்த பகுதியில், மிகவும் குறைவான மக்கள் தொகை இருப்பதாலும், போக்குவரத்தது வசதிகள் குறைவாக இருப்பதாலும் மலையேற்றம் வழியாக சுற்றுப் பயணம் செய்வதே சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் ஏற்ற வழிமுறையாக இருக்கும்.
கின்னரில் உள்ள சில குறிப்பிடத்தக்க மலையேற்ற தலங்கள் சங்லா பள்ளத்தாக்கு, பாபா பள்ளத்தாக்கு மற்றும் கின்னார் கைலாஷ் மலை ஆகியவை ஆகும். இவை மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகள் அருகிலுள்ள மடாலயங்கள் மற்றும் சரணாலயங்களுக்கும் மலையேற்றம் மூலமாக சென்று வருகின்றனர்.



Click it and Unblock the Notifications