கின்னாரின் தலைமை கிராமப்பகுதியான கல்பா-வில் இருந்து 249 கிமீ தொலைவில் சிம்லா விமான நிலையம் உள்ளது. சிம்லா விமானநிலையம் டெல்லி மற்றும் குல்லு போன்ற முக்கிய நகரங்களுடன் நேரடி விமான தொடர்பு உடைய இடமாகும். வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் டெல்லி வழியாக செல்லும் இணைப்பு விமானங்களை பயன்படுத்தலாம். விமான நிலையத்திலிருந்து கின்னார் செல்வதற்கு சுற்றுலாப்பயணிகளுக்கு வாடகை கார்கள் மற்றும் டாக்ஸிகள் நிறைய உள்ளன.