Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கின்னார் » வானிலை

கின்னார் வானிலை

வருடத்தின் எல்லா நாட்களுமே சுற்றுலாப் பயணிகள் கின்னார் நகருக்கு வந்து செல்ல முடியும். இருந்தபோதிலும் குளிர்காலத்தில் வருபவர்கள் மொத்தமான கம்பளி உடைகளையும் மற்றும் கோடை காலத்தில் வருபவர்கள் சாதாரண கம்பளி ஆடைகளையும் கொண்டு வந்தால் நல்ல அனுபவம் கிடைக்கும்.

கோடைகாலம்

ஜுன் முதல் செப்டம்பர் மாதங்கள் வரை கின்னார் மாவட்டத்தில் கோடைகாலம் இருக்கும். இந்த மாதங்களில் கின்னாருக்கு வரும் போது பகலில் குளிர்ச்சியாகவும், இரவில் வெப்பநிலை மிகவும் குறைந்து போயும் இருக்கும். இந்த நாட்களில் மெர்குரியின் அளவு 10 டிகிரி முதல் 20 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். சுற்றுலாப்பயணிகள் குளிர்கால உடைகளை இந்த நாட்களில் எடுத்துச் வருவது உகந்தது.

மழைக்காலம்

கின்னாரின் கீழ்ப் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும். ஆனாலும், வருடத்தின் பெரும்பாலான நாட்களில் கின்னாரில் வறண்ட தட்பவெப்பநிலையே நீடித்திருக்கும். உயரமான இடங்களில் உள்ள சில பகுதிகளில் மட்டும் குறைந்த அளவில் மழைப்பொழிவு இருக்கும்.

குளிர்காலம்

கின்னாரில் குளிர்காலம் அக்டோபர் மாதம் முதல் மே மாதம் வரை நீடித்திருக்கும். இந்த நாட்களில் கின்னாரின் வெப்பநிலை பூஜ்யத்திற்கும் குறைவாக சென்று விடும். குளிர்காலங்களில் அதிகபட்சம் பதிவு செய்யப்பட்ட வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸ் தான். சுற்றுலாப் பயணிகள் கின்னார் நகருக்கு செல்ல திட்டமிடும் போது மொத்தமான கம்பளி ஆடைகள் மற்றும் போர்வைகளை எடுத்துச் செல்வது நலமாக இருக்கும்.