Search
  • Follow NativePlanet
Share

கைஃபைர் – சரமாடி மலையை நோக்கி வீற்றிருக்கும் கிழக்கிந்திய அழகு நகரம்

5

நாகலாந்து மாநிலத்தில் உள்ள மிகச்சிறிய நகரங்களில் ஒன்றான இந்த ‘கைஃபைர்’ சரமாடி மலையை நோக்கியவாறு வீற்றிருக்கிறது. சரமாடி மலைச்சிகரம் நாகாலாந்தின் மிக உயரமான சிகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

கைஃபைர் என்ற பெயரில் புதிய மாவட்டமும் 2004ம் ஆண்டில் ட்டூயென்சாங் மாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இது நாகாலாந்து மாநிலத்தில் ஒன்பதாவது மாவட்டமாகும்.

ட்டூயென்சாங் மாவட்டம் வடக்கில் கைஃபைர் மாவட்டத்தையும் மேற்குப்பகுதியில் கைஃபைர் மாவட்டத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது. அதே சமயம் கைஃபைர் மாவட்டம் அதன் கிழக்குப்பகுதியில் மியான்மார் நாட்டு சர்வதேச எல்லையை கொண்டுள்ளது. நாகாலந்தின் தலைநகரான கொஹிமாவிலிருந்து 239 கி.மீ தூரத்தில் இந்த கைஃபைர் நகரம் அமைந்துள்ளது.

கைஃபைர் நகரத்தில் நாகா பூர்வகுடியினர் வசிக்கின்றனர். யிம்சுங்கா, கியாம்நியுங்கான், ஃபோம், சங்க்தம் மற்றும் சுமி போன்ற இனத்தார் இந்த பிரிவில் அடங்குவர். நாட்டார் கதைகளின்படி,  இப்பகுதியில் வாப்பூர் எனும் கிராமத்திற்கு அருகில் உள்ள கெமெஃபு எனும் இடத்தில் யிம்சுங்கா இனத்தார் தோன்றியதாக சொல்லப்படுகிறது.

கைஃபைர் மற்றும் சரமாடி மலை ஒரு அற்புத எழிற்கலவை

கடல் மட்டத்திலிருந்து 3841 மீ உயரத்தில்,  நாகாலேண்ட் மாநிலத்தின் மிக உயர்ந்த சிகரமான சரமாடி மலையயை நோக்கியவாறு வீற்றிருக்கும் கைஃபைர் நகரம் சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்பும் ஒரு சுற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.

சரமாடி மலை குளிர்காலம் முழுமைக்கும் பனி மூடி காட்சியளிக்கிறது. எனவே கைஃபைர் பகுதி கனவுலகம் போன்ற இயற்கை எழிலுடன் ஜொலிக்கின்றது. இந்த அழகிய சிறு நகரத்தை சரமாடி மலை காப்பதாக உள்ளூர் மக்கள் கருதுகின்றனர்.

கைஃபைர் நகரத்தின் எழில் அம்சங்கள்

கைஃபைர் நகரத்தில் ஃபக்கிம் காட்டுயிர் சரணாலயம், சலோமி மற்றும் மிமி குகைகள் போன்றவை பார்க்க வேண்டிய முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன. லவர்ஸ் பாரடைஸ் மற்றும் சுக்காயப் ராக் கிலிஃப்  போன்றவையும் இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.

கைஃபைர் நகரத்திற்கு அருகிலுள்ள சிமி கிராமத்தில் பயணிகள் வவாடே நீர்வீழ்ச்சி மற்றும் ட்வின் ஸ்டோன்ஸ் அல்லது கம்பீட்டிங் ஸ்டோன்ஸ் எனப்படும் பாறை அமைப்புகள் போன்றவற்றை பார்த்து ரசிக்கலாம்.

மேலும், சிஃபி எனும் இடத்தில் பழைய சங்தம் பழங்குடி கிராமம் ஒன்றையும் பார்க்கலாம். இங்கு நிங்த்சலோங் எனும் பிரசித்தமான ஒற்றைப்பாறை சிற்பம் அமைக்கப்பட்டிருக்கிறது.

கைஃபைர் சிறப்பு

கைஃபைர் வானிலை

சிறந்த காலநிலை கைஃபைர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கைஃபைர்

  • சாலை வழியாக
    Kiphire is well connected to the rest of Nagaland by the National Highway 155. The national highway connects Kiphire to Kohima, Meluri, Dimapur, and Mokochung. Regular state transport buses and private taxis are available from anywhere in Nagaland to Kiphire. The state highway also connects Tuensang-Kiphire-Meluri together.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    Dimapur also has the only railway station in Nagaland. Thus if, you want to travel to Nagaland on train, you will first have to reach Dimapur then take the road to reach Kiphire. From Dimapur to Kiphire, regular Nagaland State Transport buses and private tourist vehicles are available.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    Since Nagaland is served by only the Dimapur airport, to reach Kiphire tourists have to take a flight to Dimapur first and then travel on road. Dimapur is 471 kilometres from Kiphire and takes about 8 hours on road. The other airport options are Jorhat and Guwahati airports.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri