Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கைஃபைர் » வானிலை

கைஃபைர் வானிலை

அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலம் கைஃபைர் நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது. வெப்பநிலை மிகவும் குறைந்து காணப்பட்டாலும் இப்பருவத்தில் வெளிச்சுற்றுலாவுக்கேற்ற சூழல் நிலவுகிறது.

கோடைகாலம்

கைஃபைர் பகுதியில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டுமே குறுகில அளவிலான கோடைக்காலம் நிலவுகிறது. அதிக உஷ்ணமும் ஈரப்பதமும் கொண்ட இந்த கோடைக்காலம் மிகுந்த அசௌகரியமானதாக காணப்படுகிறது. இக்காலாத்தில்  இங்கு சராசரியாக 30°C  முதல் 35°C வரை வெப்பநிலை காணப்படும். அதிகபட்சமாக  30°C  வெப்பநிலையும் இங்கு காணப்படலாம்.

மழைக்காலம்

ஜூன் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை கைஃபைர்  பகுதியில் மழைக்காலம் நீடிக்கிறது. அதிகபட்சமாக 75 மி.மீ வரை இங்கு மழைப்பொழிவு பதிவாகிறது. இனிமையான சூழலைக்கொண்டிருப்பதால் இந்த மழைக்காலம் சுற்றுலாவுக்கு ஏற்ற காலமாகவும் காணப்படுகிறது.

குளிர்காலம்

( டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை) : கோடைக்காலத்தில் ஈரப்பதம் மற்றும் உஷ்ணத்துடன் அசௌகரியமாக காணப்படும் கைஃபைர் நகரம் குளிர்காலத்திலும் கடுமையான குளிருடன் காட்சியளிக்கிறது. இக்காலத்தில் 2.7°C வரை வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது. குளிர் தாங்கும்படியான கதகதப்பான உடைகளுடன் இக்காலத்தில் இப்பகுதிக்கு விஜயம் செய்வது சிறந்தது.