கொடசத்ரி மலைப்பிரதேசத்துக்கு விஜயம் செய்ய இனிமையான பருவ நிலையைக் கொண்டிருக்கும் கோடைக்காலமே ஏற்றதாக கருதப்படுகிறது.
(மார்ச் முதல் மே வரை): கோடைக்காலத்தின் கொடசத்ரி மலைப்பிரதேசம் குளுமையான இனிமையான பருவ நிலையுடன் காணப்படுகிறது. 250 C முதல் 350 C வரை இக்காலத்தில் வெப்பநிலை நிலவுகிறது. கோடைக்காலம் இங்கு பயணம் மேற்கொள்ள ஏற்றதாகவே உள்ளது.
(ஜூன் முதல் ஆகஸ்ட் வரை):கொடசத்ரி மலைப்பிரதேசம் மழைக்காலத்தில் நல்ல கணிசமான மழையை பெறுகிறது. இப்பருவத்தில் வெப்பநிலை மிகவும் குறைந்து குளிர் நிலவுகிறது. அதிக மழை காரணமாக வெளிச்சுற்றுலா சாத்தியமில்லை என்பதால் சுற்றுலாப்பயணிகள் அதிகம் இக்காலத்தில் வருவதில்லை.
(செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை): குளிர்காலத்தில் கொடசத்ரி மலைப்பிரதேசம் நடுங்க வைக்கும் குளிருடன் காணப்படுகிறது. இக்காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 150 C முதல் 200 C வரை உள்ளது. டிசம்பர் மாதத்தில் இன்னமும் கூட வெப்பநிலை குறையலாம். சீதோஷ்ணநிலை விரும்பத்தக்கதாக இருந்தாலும் மலையேற்றம் போன்ற வெளிச்சுற்றுலாவுக்கு அதிகக்குளிரும் பனிமூட்டமும் இடைஞ்சலாகவே இருக்கும்.