Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» கொடுங்கல்லூர்

கொடுங்கல்லூர் – ஆலயங்கள் மற்றும் வரலாற்றுத்தடங்கள் நிறைந்த எழில் நகரம்

21

திருச்சூர் மாவட்டத்திலுள்ள கொடுங்கல்லூர் எனும் சிறு நகரம் மலபார் கடற்கரைப் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. இங்குள்ள பகவதி கோயில் மற்றும் துறைமுகத்திற்காக இந்நகரம் பிரசித்தமாக அறியப்படுகிறது. பல நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்லும் பெருமைமிகு வரலாற்றுப் பின்னணியையும் இது வாய்க்கப் பெற்றுள்ளது. 7ம் நூற்றாண்டில் சேர மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய வரலாற்றுக்கீர்த்தியும் இதற்குண்டு.

கடற்கரைக்கு அருகில் அமைந்திருப்பதால் ஒரு முக்கிய வணிக கேந்திரமாக அந்நாளில் இது திகழ்ந்திருக்கிறது. நவீன வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி மத்திய கிழக்கு நாடுகளான சிரியா, ஆசியா மைனர் மற்றும் எகிப்து போன்றவற்றுடன் இந்த நகரம் வாணிபத்தொடர்புகளைக் கொண்டிருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

புராதன வரலாற்றோடு கலந்த செழுமையான பாரம்பரியம்

புராதன காலத்திலேயே கொடுங்கல்லூர் நகரம் முக்கியமான வாசனைப்பொருள் ஏற்றுமதி நகரமாக பிரசித்தி பெற்று விளங்கியிருக்கிறது. யவனப்பிரியா என்ற பெயரில் அந்நாளில் அழைக்கப்பட்ட மிளகு இங்கிருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.

கடல் மற்றும் உப்பங்கழி நீர்த்தேக்கங்களால் சூழப்பட்டுள்ள இந்த பழமையான நகரம் மிக சுவாரசியமான - வரலாற்றுக்காலத்துக்கு முந்தைய நாகரிக சான்றுகளையும் பெற்றுள்ளது.

அதாவது கி.மு 1 ம் நூற்றாண்டிலேயே இந்த துறைமுக நகரம் கடல் சார் வாணிபத்தில் ஈடுபட்டிருந்திருக்கலாம் என்று நம்புவதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

கொடுங்கல்லூரின் பாரம்பரியச் செழுமையானது இதன் கடற்கரை துறைமுக அமைப்பின் மூலம் வாய்க்கப்பெற்றுள்ளது. கிறிஸ்த்துவம், ஜூதாயிசம், இஸ்லாம் மற்றும் பல அயல் நாட்டு மத வடிவங்கள் இந்த கடற்கரை வழியாகவே இப்பகுதிக்கு வந்து சேர்ந்திருக்கின்றன என்றே கூறலாம்.

கி.பி 52ம் ஆண்டில் கிறிஸ்துவின் பிரதான சீடர்களில் ஒருவரான புனித தோமா இந்த கடற்கரையில் முதன் முதலாக வந்திறங்கியதாக நம்பப்படுகிறது. இந்தியாவிலேயே முதல் கிறிஸ்துவ தேவாலயம் இங்குதான் கட்டப்பட்டது என்ற பெருமையையும் கொடுங்கல்லூர் பெற்றுள்ளது.

அது மட்டுமல்லாமல் இஸ்லாமிய நாகரிகத்தின் வரலாற்றுப் பின்னணியையும் இந்த நகரம் தன்னுள் கொண்டிருக்கிறது. இங்குள்ள சேரமான் ஜும்மா மஸ்ஜித் எனும் மசூதி இந்தியாவின் முதல் இஸ்லாமிய வழிபாட்டுத்தலம் என்ற பெருமையுடன் கால ஓட்டத்தில் நீடித்து நிலைத்து நிற்கிறது.

பலவித மதம், பாரம்பரியம் யாவும் கலந்த கதம்பக்கலாச்சாரம்

தற்கால கொடுங்கல்லூர் நகரமானது வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் பொழுதுபோக்கு பயணிகள் போன்ற இருசாராரையும் திருப்திபடுத்தும் விதத்தில் காட்சியளிக்கிறது. பொதுவாக பயணிகள் இங்குள்ள அழகிய கடற்கரையை கண்டு ரசிக்கவும், ஆங்காங்கு நிற்கும் வரலாற்றுச்சின்னங்களில் கடந்த போன காலம் விட்டுச்சென்றிருக்கும் உறைந்து போன தடயங்களை தரிசிக்கவும் வருகை தருகின்றனர்.

இங்குள்ள ஆலயங்களில் ஆன்மீக சாந்தியை தேடி வரும் பக்தர்களும் உண்டு. ஒரு புறம் அரபிக்கடல் மறுபுறம் பெரியார் ஆறு போன்றவற்றால் சூழப்பட்டுள்ள இந்த புராதன நகரம் இயற்கை ஆர்வலர்களையும் தன் அற்புதமான புவியியல் அழகம்சங்களால் ஈர்க்கிறது.

பொழுதுபோக்கை நாடும் சுற்றுலாப்பயணிக்கு இந்நகரில் ஏராளமான அம்சங்கள் காத்திருக்கின்றன. தற்கால கேரளாவில் கொடுங்கல்லூர் என்றாலே ஞாபகம் வருவது இங்குள்ள பகவதி அம்மன் கோயில்தான் எனும் அளவுக்கு நகரின் மையத்தில் அமைந்துள்ள இந்த குரும்பா பகவதி கோயில் பிரசித்தி பெற்றுள்ளது.

இது குரும்பாக்காவு கோயில் அல்லது கொடுங்கல்லூர் பகவத் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் பத்ரகாளி அம்மன் குடிகொண்டுள்ளது. கொடுங்கல்லூர் பரணி மற்றும் தலப்போலி போன்ற முக்கியமான திருவிழாக்கள் இந்த பகவதி கோயிலில் கொண்டாடப்படுகின்றன. இத்திருவிழாக்களின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலில் திரண்டு பகவதி அம்மனை வழிபடுகின்றனர்.

கீழ்த்தலி மஹாதேவா கோயில், கூடல்மாணிக்யம் கோயில், மர் தோமா சன்னதி, சிருங்காபுரம் மஹாதேவா கோயில், திருவஞ்சிக்குளம் மஹாதேவா கோயில் மற்றும் திரிப்பிரயார் ஸ்ரீ ராமர் கோயில் போன்றவை இங்குள்ள இதர முக்கியமான ஆன்மீக திருத்தலங்களாகும். தங்கநிற மணற்பரப்பையும் அசைந்தாடும் தென்னை மரங்களையும் கொண்ட கொடுங்கல்லூர் கடிப்புரம் பீச் எனப்படும் அழகிய கடற்கரையும் பயணிகளை கவர்ந்து இழுக்கிறது.

இங்கு பல வித நீர்விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்துள்ளன. சிதிலமடைந்து காணப்படும் கொட்டப்புரம் கோட்டையும் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாக பயணிகளால் ரசிக்கப்படுகிறது.

வித்தியாசமான சுற்றுலா அனுபவம்

கேரளா மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள கொடுங்கல்லூர் நல்ல போக்குவரத்து வசதிகளை கொண்டிருக்கிறது. திருச்சூர் மற்றும் கொச்சியிலிருந்து சமதூரத்தில் அமைந்திருப்பதால் வட மற்றும் தென் கேரளப்பகுதிகளுடன் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மற்ற எந்த நகரங்களிலும் பார்க்க முடியாத அளவுக்கு இங்கு நீர்வழிப்போக்குவரத்து அதிகமாக நடைமுறை பயன்பாட்டில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இங்குள்ள வெஸ்ட் கோஸ்ட் கெனால்’ எனும் போக்குவரத்துக்கால்வாய் இந்தியாவிலேயே முக்கியமான படகுப்போக்குவரத்து கால்வாயாக விளங்குவதுடன் சுற்றுலா முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது.

எல்லா தென்னிந்திய நகரங்களையும் போலவே கொடுங்கல்லூர் நகரமும் வெப்ப மண்டலத்தில் தான் அமைந்துள்ளது. இருப்பினும் கடற்கரைக்கு அருகில் உள்ளதால் இனிமையான சூழலை கொண்டுள்ளது.

உயிரோட்டமிக்க வரலாற்றுப்பின்னணியும், பக்தி மணம் கமழும் ஆன்மீக அடையாளத்தையும் கொண்டுள்ள இந்த கொடுங்கல்லூர் நகரம் ஒரு வித்தியாசமான பயண அனுபவத்தை சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்க காத்திருக்கிறது.

கொடுங்கல்லூர் சிறப்பு

கொடுங்கல்லூர் வானிலை

சிறந்த காலநிலை கொடுங்கல்லூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கொடுங்கல்லூர்

  • சாலை வழியாக
    கொடுங்கல்லூர் நகரம் நல்ல சாலைப் போக்குவரத்து வசதிகளைப்பெற்றுள்ளது. KSRTC அரசுப்பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் கேரளாவின் எல்லா நகரங்களிலிருந்தும் கொடுங்கல்லூருக்கு இயக்கப்படுகின்றன. கொச்சி (44 கி.மீ), திருச்சூர் (38), குருவாயூர் (50) போன்ற முக்கிய நகரங்களிலிருந்தும் இங்கு வரலாம். இந்த கேரள நகரங்களுக்கு எல்லா தென்னிந்திய நகரங்களிலிருந்தும் பேருந்து சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கொடுங்கல்லூருக்கு அருகில் 16 கி.மீ தூரத்திலுள்ள இரிஞ்சாலக்குடா ரயில் நிலையத்திலிருந்து கேரளாவின் முக்கிய நகரங்களுக்கு ரயில் இணைப்புகள் உள்ளன. இந்த ரயில் நிலையத்திலிருந்து டாக்சி, பேருந்து அல்லது ஆட்டோ மூலம் பயணிகள் கொடுங்கல்லூர் வந்து சேரலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கொடுங்கல்லூர் நகரத்திலிருந்து 35 கி.மீ தூரத்தில் கொச்சி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னை, பெங்களூர், டெல்லி மற்றும் ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. இந்த விமான நிலையங்களிலிருந்து டாக்சிகள் மூலம் பயணிகள் சுலபமாக கொடுங்கல்லூர் நகரத்தை வந்தடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat