Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோலார் » வானிலை

கோலார் வானிலை

ஜுலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஈரப்பதம் குறைந்து காணப்படுவதால் இந்த மாதங்களில் கோலார் பகுதிக்கு செல்லலாம்.

கோடைகாலம்

(மார்ச் மாத்த்திலிருந்து மே மாதம் வரை): கோலார் பகுதியில் கோடைக்காலம் உஷ்ணம் ஈரப்பதம் போன்றவை மிக கடுமையாக உள்ளன. பகல் பொழுதில் வெப்பநிலை 35° C ஆகவும் இரவில் 30° C ஆகவும் காணப்படும். சுற்றுலாப்பயணிகள் கோடைக்காலத்தில் கோலாருக்கு விஜயம் செய்வதை அதிக வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக விரும்புவதில்லை.

மழைக்காலம்

(அக்டோபர் மாத்த்திலிருந்து டிசம்பர் மாதம் வரை): வடகிழக்கு பருவக்காற்றால் மழையைப்பெறும் கோலார் பகுதி இக்காலத்தில் மிதமானது முதல் கடுமையானது வரையான மழைப்பொழிவை பெறுகிறது. மழைக்காலத்திலும் பயணிகள் கோலார் பகுதிக்கு செல்வதை தவிர்க்கின்றனர்.

குளிர்காலம்

(டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை): குளிர்காலத்தின் போது பருவநிலை குளுமையாகவும் இனிமையாகவும் உள்ளது. குளிர்காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 30° C ஆகவும் குறைந்தபட்சமாக 20° C ஆகவும் காணப்படும். குறைந்த ஈரப்பத த்துடன் இனிமையான சூழலைத்தரும் குளிர்காலமே கோலார் பகுதிக்கு சுற்றுலா செல்ல உகந்த பருவ காலமாக சிபாரிசு செய்யப்படுகிறது.