Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோலாப்பூர் » வானிலை

கோலாப்பூர் வானிலை

கடற்கரை சீதோஷ்ண நிலை மற்றும் உள் நாட்டு சீதோஷ்ண நிலை இரண்டும் கலந்த கலவையான இயல்பை கோலாப்பூர் பகுதி பெற்றிருக்கிறது. இந்த சுவாரசியமான சீதோஷ்ண அமைப்பின் காரணமாக எப்போதுமே 14°C ல் இருந்து 35°C வரை வெப்பநிலை காணப்படுகிறது. ஆகவே கோலாப்பூருக்கு எந்தக் காலத்திலும் பயணம் மேற்கொள்ளலாம். இருப்பினும் வெப்பம் சற்றுக்கடுமையாக இருக்கும் மே மாதத்தை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இம்மாதத்தில் நிலவும் அதிக வெப்பம் இயற்கை மற்றும் இதர வெளி அழகுகளை ரசிப்பதற்கு இடையூறாக இருக்கலாம்.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் வெப்ப நிலை அதிகபட்சம் 38°C  ஆக உயர்ந்து காணப்படுகிறது. மற்ற சமயங்களில் 33°C ல் இருந்து 35°C வரையில் அல்லது 24°C ல் இருந்து 26°C ஆக காணப்படுகிறது. இக்காலத்தில் ஈரப்பதம் அதிகமாக காற்றில் நிலவினாலும் பொதுவாக சூழல் குளுமையாகவே இருக்கும்.

மழைக்காலம்

ஜுன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் மழைக்காலத்தில் கோலாப்பூர் பகுதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் காரணத்தால் கணிசமான மழையை பெறுகிறது. இக்காலத்தில் சூழல் வெப்ப நிலை 20°C ல் இருந்து 30°C ஆக காணப்படுகிறது. பொதுவாக மத்தியமான மழைப்பொழிவு இருக்கும் கோலாப்பூர் பகுதி அதிக மழை பொழிவு இருந்தால் மாதக்கணக்கில் கடும் வெள்ளப்பெருக்கெடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குளிர்காலம்

நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நிலவும் குளிர் காலத்தில் கோலாப்பூரில் பருவநிலை மிக இனிமையாக காணப்படுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை 14°C ல் இருந்து 30°C வரை இருக்கும். காற்றில் ஈரப்பதம் மிகக்குறைவாக இருப்பதால் சூழல் மிகவும் விரும்பத்தக்கதாக லேசானதாக காணப்படும்.