Search
  • Follow NativePlanet
Share

கொல்கத்தா – பாரம்பரிய கலாச்சாரங்களின் சங்கமம்!

82

மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரமாக விளங்கும் கொல்கத்தா நகரம் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் நிரம்பி வழியும் நகரங்களில் ஒன்று. பழமையான இந்நகரம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தலைநகரமாக இயங்கிய பெருமையை பெற்றுள்ளது. வெகு சமீப காலம் வரை கல்கத்தா என்று அறியப்பட்ட இந்நகரம் காலத்தில் உறைந்து போன பழமையின் கம்பீரமாக வீற்றிருக்கிறது.

மக்களும், கலாச்சாரமும்!

கொல்கத்தா மக்கள் பல காலமாக கலாரசனை மிகுந்தவர்களாகவும் பல்வேறு நிகழ்த்து கலை பாரம்பரியங்களை ஊக்குவிப்பவர்களாகவும், இலக்கிய படைப்புகளில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருந்து வந்துள்ளனர்.

துர்க்கா பூஜை, தீபாவளி மற்றும் காளிபூஜா போன்ற பண்டிகைக்காலங்களில் தங்கள் வீடுகளை ஒளிமயமாக அலங்கரித்து பாரம்பரிய மரபுகளை அப்படியே பின்பற்றுவதில் கல்கத்தாவாசிகள் தங்கள் தனித்துவத்தை உணர்கின்றனர் .

தற்போது கல்கத்தா நாடகக்குழுக்கள் நடத்தும் நாடக வடிவங்கள் மற்றும் பரீட்சார்த்த குறு நாடகங்கள் உலகாளவிய கவனிப்பை பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கை ரிக்ஷா வண்டிகள் இந்த நகரத்தின் வித்தியாசமான அம்சமாக சுற்றுலாப்பயணிகளை கவர்கிறது என்றாலும் இந்த விஷயத்தில் மனித உரிமை ஆர்வலர்களின் அதிருப்தியையும் இந்நகரம் சந்தித்து வருகிறது.

தவிர பழமையான மஞ்சள நிற டாக்சிகள் மற்றும் நெருக்கடியான நகரப்பேருந்துகள் போன்ற போக்குவரத்து வசதிகளை இம்மாநகரம் கொண்டிருக்கிறது.

வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் ‘காலேஜ் ஸ்ட்ரீட்’ எனும் சாலைக்கு விஜயம் செய்வது அவசியம். இங்கு எல்லா புத்தகங்களும் கிடைக்கின்றன. பிரபல்யமான சில நூல்களை இங்கே பேரம் பேசி சலுகை விலையில் வாங்கிக்கொள்ளலாம்.

உணவுச்சுவை!

அரிசி மற்றும் பருப்பு போன்றவற்றுடன் பரிமாறப்படும் மீன் குழம்புகள் மற்றும் மீன் பண்டங்களுக்கு வங்காளிகள் பிரசித்தமாக அறியப்படுகின்றனர்.

உள்ளூர் உணவுவகைகளை குறைந்த விலைக்கு வழங்கும் பலவகை உணவகங்கள் மற்றும் கடைகள் இந்நகரம் முழுதும் விரவியிருக்கின்றன. கல்கத்தா விஜயத்தின்போது இங்குள்ள சிறு உணவகங்களில் பரிமாறப்படும் உணவுகளை சுவை பார்ப்பது மிக மிக அவசியம்.

பெங்காலி இனிப்புகள் நாடு முழுதுமே புகழ் பெற்றவை என்பதும் குறிப்பிடத்தக்கது. சந்தேஷ், மிஷ்டி தாஹி (இனிப்புத்தயிர்) மற்றும் பிரசித்தமான ரசமலாய் போன்றவை இந்நகரத்தின் இனிப்பு வகைகளில் குறிப்பிடத்தக்கவை.

வித்தியாசமான உணவு வகைகளை சுவைக்க விரும்பும் பட்சத்தில் சைனா டவுன் எனும் பகுதிக்கு சென்று வரலாம். இங்கு காரமான ‘சைனீஸ்’ உணவு வகைகள் கிடைக்கின்றன. ‘மோமோ’ என்பது இங்கு கிடைக்கும் உணவுப்பண்டங்களில் ஒரு முக்கியமான வகை.

திரைப்படங்களில் கொல்கத்தா!

கொல்கத்தா நகரம் சினிமாப்படங்களில் ஒரு முக்கியமான கதைக்களமாக அவ்வப்போது இடம் பெற்று வந்திருக்கிறது. ஹாலிவுட் மற்றும் பாலிவுட் தயாரிப்புகளில் ஏதோ இடத்தில் கல்கத்தா இடம் பெறத் தவறுவதில்லை.

கல்கத்தாவின் அடையாளங்களான ஹௌரா பாலம் மற்றும் டிராம் வண்டிகள் போன்ற காட்சிகள் பல படங்களில் காண்பிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே முதல் முதலாக சுரங்க ரயில் வசதியான ‘மெட்ரோ’ கொல்கத்தாவில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

கொல்கத்தாவின்  அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், விக்டோரியா மெமோரியல் மற்றும் ஆசியாடிக் சொசைட்டி போன்றவற்றிற்கு உள்ளூர் சினிமா படங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன.  

கல்வி

கடற்பயண துறைகளில் அளிக்கப்படும் படிப்புகளுக்கான கேந்திரமாக கொல்கத்தா நகரம் பிரசித்தி பெற்றுள்ளது. நாட்டிலேயே பழமையான கடற்பயண கல்வி மையமாக அறியப்படும் MERI கல்வி மையம் வெகு காலமாக கல்கத்தாவில் இருந்து வருகிறது. எனவே இந்தியக்கடல் மாலுமிகள் பலருக்கும் கொல்கத்தா நகரத்தின் மீது ஒரு பிரியம் உண்டு.

விளையாட்டு

கிரிக்கெட் மற்றும் கால்பந்து போன்றவற்றில் இந்த நகரத்திற்கு உள்ள ஆர்வத்தை இங்குள்ள பல்வேறு ஸ்டேடியங்கள் மூலமாக உணர முடியும்.

இந்த ஸ்டேடியங்கள் தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சி மைதானமாக பயன்படுத்தப்படுகின்றன. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் எனும் கொல்கத்தா நகரத்தின் கிரிக்கெட் குழு இந்திய பிரிமியர் லீக் போட்டிகளில் அங்கம் வகிக்கிறது.

இரவு நேர பொழுதுபோக்கு

கொல்கத்தா நகரத்தின் இரவு நேர பொழுதுபோக்கு அம்சங்கள் நாட்டிலேயே மிகச்சிறந்தவையாக பிரசித்தி பெற்றுள்ளன. இங்குள்ள நைட்கிளப்கள் சாதாரண நுழைவுக்கட்டணத்தை கொண்டுள்ளன. காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாக அமைப்புகள் மக்களுக்கான பாதுகாப்பை பேணுவதில் அக்கறை எடுத்துக்கொள்கின்றன. அது மட்டுமல்லாமல் அதிகாலை நேரத்திலும் நகரப்பகுதிகளை இணைக்கும் போக்குவரத்து சேவைகள் இயக்கப்படுகின்றன.

கொல்கத்தா நகரம் எல்லாவகையான பயணிகளுக்கும் ஏற்ற அம்சங்களை கொண்டுள்ளது. தனிநபர் சாககப்பிரயாணிகள் மற்றும் குடும்பச்சுற்றுலா பயணிகள் ஆகிய அனைவருக்கும் ஏற்ற உள்ளூர் உணவுச்சுவை, கலையம்சங்கள், நவீன அம்சங்கள் மற்றும் இரவுநேர உல்லாச போழுதுபோக்கு அம்சங்களை இது கொண்டிருக்கிறது.

தற்போதைய தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துறை சார்ந்த முக்கியமான சர்வதேச நிறுவனங்கள் இயங்கும் கேந்திரமாகவும் இது திகழ்கிறது.  

கொல்கத்தாவின் முக்கிய சுற்றுலா அம்சங்கள்

கல்கத்தா நகரின் உள்ளேயும் வெளியேயும் ஏராளமான சுற்றுலா அம்சங்கள் நிரம்பியுள்ளன. இவற்றில் விக்டோரியா மெமோரியல், இந்தியன் மியூசியம், ஈடென் கார்டன்ஸ், சைன்ஸ் சிட்டி போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஜி.பி.ஓ  மற்றும் கல்கத்தா ஹைகோர்ட் போன்ற பல பாரம்பரிய கட்டிடங்களும் பார்க்க வேண்டிய அம்சங்களாகும்.

எப்படி செல்வது கொல்கத்தாவிற்கு?

மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா சாலைவழிப்போக்குவரத்து, ரயில்பாதைகள் மற்றும் விமான சேவைகள் போன்றவற்றின் மூலம் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது.

கொல்கத்தா சிறப்பு

கொல்கத்தா வானிலை

சிறந்த காலநிலை கொல்கத்தா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கொல்கத்தா

  • சாலை வழியாக
    NH2 மற்றும் NH6 ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் கொல்கத்தா நகரத்தை நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்கின்றன. டார்ஜிலிங், ஜாம்ஷெட்பூர் மற்றும் சிலிகுரி போன்ற நகரங்களிலிருந்து கல்கத்தாவுக்கு சாலை மார்க்கமாக பயணம் மேற்கொள்ளலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கொல்கத்தா நகர ரயில் நிலையம் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ரயில் சேவைகளை கொண்டுள்ளது. டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு தினசரி ரயில் சேவைகள் இங்கிருந்து கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கொல்கத்தா நகரத்தின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்திலிருந்து டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு தினசரி விமான சேவைகள் உள்ளன. பல்வேறு சர்வதேச நகரங்களுக்கும் இங்கிருந்து விமான சேவைகள் கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri