Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொல்லிமலை » வானிலை

கொல்லிமலை வானிலை

மழைக்காலத்தின் இறுதியில் அடிக்கடி மணற்சரிவுகள் நிகழ்வதால் அந்த மாதங்களைத் தவிர வேறு எப்போது வேண்டுமானாலும் கொல்லிமலைக்குப் பயணப்படலாம். மேலும் மழைக்காலத்தில் தொடர்மழையில் ஊர்சுற்றிப் பார்ப்பது கெடவும் வாய்ப்பிருக்கிறது. ஆக அனைத்து விசயங்களையும் கருத்தில் கொண்டு பார்த்தால் கோடைகாலத்தில் கொல்லிமலைக்குச் செல்வதே சிறந்த பயண அனுபவத்தைத் தரும்.

கோடைகாலம்

கொல்லிமலையில் கோடைகால தட்பவெட்ப நிலை குளிர்ச்சியாகவே இருக்கிறது. அதிகபட்சமாக 30 டிகிரியும், குறைந்தபட்சமாக 18 டிகிரி வரையில் பருவநிலை மாறுபடுகிறது. சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் கோடைகால வெயிலில் இருந்து தப்பிக்க கோடைகாலத்திலேயே கொல்லிமலையில் குவிகிறார்கள்.  

மழைக்காலம்

அக்டோபர் மாதத்தில் மிக அதிகமாக பெய்யும் மழையில் பெரும்பகுதி வடகிழக்கு பருவமழையின் மூலமே கிடைக்கிறது. ஜூன், ஜூலை மாதங்களில் எப்போதாவது சிறிய தூறல்களைத் தவிர பெரும்பாலும் இப்பகுதிகளில் மழை பெய்வதில்லை. கொல்லிமலை ஒவ்வொரு மழைக்காலத்திலும் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது. கொல்லிமலையில் முழு இயற்கை அழகையும் மழைக்காலத்தில் காணலாம்.

குளிர்காலம்

குளிர்காலத்தில் குறைந்தபட்சம் 13டிகிரியில் இருந்து அதிகபட்சமாக 18டிகிரி வரையிலுமே பருவநிலை நிலவுகிறது. தமிழ்நாட்டின் வேறு எந்த பகுதியையும் விட கொல்லிமலையின் குளிர்காலத்தில் கடும்குளிர் நிலவுகிறது. அதனால் குளிர்காலத்தில் கொல்லிமலைக்கு செல்ல விரும்பும் பயணிகள் கண்டிப்பாக குளிரை சமாளிப்பதற்கு தேவையான கம்பளித் துணிகளை எடுத்துச் செல்வது அவசியம்.