Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோத்தகிரி » வானிலை

கோத்தகிரி வானிலை

கோத்தகிரி செல்வதற்கான சிறந்த பருவம் அதிக வெப்பமும்  அதிக குளிரும் இல்லாத கோடை காலமேயாகும். தட்பவெப்பம் 15 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.  அப்படியென்றால் கோத்தகிரியில் உங்கள் அனுபவம் காலநிலையால் பாதிக்கப்படாது. கோடை காலம் மார்ச் மாதம் தொடங்கி மே மாத இறுதி வரி நீள்கிறது.  கோத்தகிரிக்கு பயணம் செல்ல அதுவே சிறந்த சமயம்.

கோடைகாலம்

கோத்தகிரி பயணம் செல்ல வருடத்தின் கோடை காலம் சிறந்த சமயமாகும். இந்த சமயத்தில் தாங்கக்கூடிய அளவு மிதமான தட்பவெப்பம் காணப்படும். பனிப்பொழிவும் அதிகமாக இருக்காது என்பதால் கோத்தகிரியின்  அழகிய காட்சிகளை காண்பதில் தடை ஏதும் இருக்காது. கோடை காலத்தில் கோத்தகிரியின்  தட்பவெப்பம் 15 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

மழைக்காலம்

மழைக் காலத்தில் கோத்தகிரி செல்வது உசிதமாக இருக்காது. எல்க் மற்றும் கேத்தரின் நீர் வீழ்ச்சிகள் விதிவிலக்காக இந்த சமயத்தில் அவற்றின் அழகின் உச்சத்தில் இருக்கும். சராசரி வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ் காணப்படும். ஆனால் இரவுகளில் இது 2 டிகிரி செல்சியஸ் வரை குறையலாம்.

குளிர்காலம்

தென் இந்தியாவில் உள்ள பிற மலை வாசஸ்தலங்களை போலவே கோத்தகிரியும் குளிர்காலதிற்கு புகழ் பெற்றது இல்லை. கோத்தகிரியில் குளிர்காலம் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை காணப்படும்.  குளிர்காலத்தில் சராசரி வெப்ப நிலை 12 டிகிரி செல்சியஸ் ஆகும். ஆனால்  இரவு நேரங்களில் பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் வரையிலும் குறையக் கூடும். எனவே இந்த சமயத்தில் கோத்தகிரி செல்வது உசிதம் இல்லை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.