குச்சிப்புடி கிராமத்தின் அருகாமை விமான நிலையமாக விஜயவாடா உள்நாட்டு விமான நிலையம் அறியப்படுகிறது. இந்த விமான நிலையத்திலிருந்து மும்பை, ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களுக்கு தினமும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த பின் வாடகை கார்கள் மூலம் சுலபமாக குச்சிப்புடி கிராமத்தை அடையலாம். மேலும் விஜயவாடா மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் மூலமும் நீங்கள் குச்சிப்புடி கிராமத்தை அடைய மூடியும்.