Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குஃப்ரி » வானிலை

குஃப்ரி வானிலை

குஃப்ரி நகரில் ஆண்டு முழுவதும் மிகவும் ரம்மியமான காலநிலை நிலவுகிறது. இங்கு கோடை காலங்களில், இதமான வெப்பமும், குளிர்காலங்களில், கடுங்குளிரும் உணரப்படுகிறது. குஃப்ரி நகரை சுற்றிப் பார்க்க மார்ச் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலங்கள் சிறந்ததாக கருதப்படுகின்றன.

கோடைகாலம்

குஃப்ரி நகரின் கோடை காலங்களான ஏப்ரல் முதல் ஜூன் வரை இங்கு 12℃ முதல் 19℃  வரை வெப்பநிலை நிலவுகிறது. கோடை காலமே சுற்றுலாப் பயணிகள் இடங்களைப் பார்க்கவும், சாகச விளையாட்டுக்களை விளையாடி மகிழவும் உகந்த பருவமாகும்.

மழைக்காலம்

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மழைக்காலங்களில் மிகக் குறைந்த அளவு மழைப் பொழிவே இங்கு பதிவாகிறது. அப்பொழுது இங்கு வெப்பநிலை 10℃ க்கும் குறைவாகக் காணப்படுகிறது.

குளிர்காலம்

அக்டோபர் முதல் மார்ச் வரையான குளிர்காலத்தில் மிக அதிகக் குளிர் காணப்படுகிறது. அந்த காலங்களில் 0℃க்கும் கீழாக வெப்பநிலை குறைகிறது. மிக அதிகக் குளிர் நிலவுவதால், பொதுவாக சுற்றுலாப் பயணிகள், இப்பருவத்தில் இங்கு வருகை புரிவதை தவிர்ரபது நல்லது. எனினும் குளிர்காலங்களில் இங்கு வரத் திட்டமிடும் சுற்றுலாப் பயணிகள், பனிப் புண்கள் ஏற்படுவதைத் தடுக்க ஏதுவாக அடர்த்தியான கம்பளிகளையும், காலணிகளையும் கொண்டு வர அறிவுறுத்தப்படுகிறார்கள்.