இமயமலைப் பகுதியில் அதன் தெற்கு நோக்கிய சரிவில் மிலம் பனிமலை அமைந்துள்ளது. இந்த பனிமலையின் உயரம் 3870 மீட்டரில் தொடங்கி 5500 மீட்டர் வரை செல்கிறது.
குமாவோன் பகுதியிலுள்ள பனிமலைகளிலேயே மிகவும் பெரியதாக கருதப்படும் மிலம், சுமார் 37 ச.கிமீ பரப்பளவுடையதாகும். காளி நதியின் துணையாறான கோரிகங்கா நதியின் ஆதாரமாகவும் மிலம் பனிமலை விளங்குகிறது.
இந்த பனிமலைக்கு செல்லும் மலையேற்றப் பாதையில் நீர்வீழ்ச்சிகள், கிராமங்கள், கானகங்கள் மற்றும் மரப்பாலங்கள் ஆகியவற்றை நீங்கள் கடந்து செல்ல வேண்டும்.
பித்தோரகாரின் தாலுகாவாக இருக்கும் முன்சியாரியை, தங்களின் உணவுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் முகாமிடமாக சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications