தியோஹா ஓடையின் கரைகளில் அமைந்துள்ள நானக்மாட்டா ஒரு வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும். நானக் மாதா சாஹிப் குருத்துவாரா என்ற பெயருடைய குருத்துவாராவைக் கொண்டுள்ளதால் இந்த இடம் சீக்கியர்களின் முதன்மையான புனிதத்தலமாக விளங்குகிறது.
கி.பி.1515-ல் சீக்கியர்களின் முதல் குருவான குரு நானக் கைலாய மலைக்கு செல்லும் வழியில் இந்த அரண்மனைக்கு வந்து சென்றாதாக வரலாற்றின் ஏடுகளில் எழுதப்பட்டுள்ளன.
சரயு நதிக்கரையில் எழுப்பப்பட்டுள்ள இந்த குருத்துவாராவுக்கு அருகிலேயே நானக் சாகர் அணைக்கட்டும் உள்ளது. இந்த இடத்திற்கு இன்ப சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் மீன் பிடித்தல் மற்றும் படகு சவாரி போன்ற பொழுதுபோக்குகளை அனுபவித்திட முடியும்.



Click it and Unblock the Notifications