பின்டார் பள்ளத்தாக்கின் மேற்கு பிராந்தியத்தில் சுந்தர்துங்கா பனியாறு உள்ளது. சுந்தர் துங்கா என்ற பெயருக்கு அழகிய கற்களையுடைய பள்ளத்தாக்கு என்று பொருள், அதற்கேற்ப பனிப்பாளங்களை கொண்டதாக இந்த பனியாறு உள்ளது.
சுந்தர்துங்காவில் மாட்கோட்டி மற்றும் சுக்ராம் என்ற இரண்டு பனியாறுகள் சேர்ந்துள்ளன. அவற்றிற்கு அருகில் தார்கோட், மரிக்துனி மற்றும் பிவாலித்வார் ஆகிய சிகரங்கள் அமைந்துள்ளன.
லோஹர்கேட்டிலிருந்து 11 கிமீ மலைப்பயணம் செய்தால் தாகுரிக்கும், அங்கிருந்து மேலும் 11 கிமீ பயணம் செய்தால் காட்டி கிராமத்தையும் அடைந்திட முடியும். பிறகு, காட்டியிலிருந்து 8 கிமீ தொலைவிலுள்ள ஜய்தோலிக்கும், அங்கிருந்து 22 கிமீ தொலைவுக்கு மலையேற்றம் செய்து சுந்தர் துங்கா பள்ளத்தாக்கையும் அடைந்திட முடியும்.



Click it and Unblock the Notifications