Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குமாவோன் » வானிலை

குமாவோன் வானிலை

வருடம் முழுவதுமே மகிழ்ச்சிகரமான பருவநிலை மற்றும் வெப்பநிலையைக் கொண்டிருக்கும் குமாவோனுக்கு சுற்றுலாப் பயணிகள் வருடத்தின் எந்த நாட்களிலும் வந்து செல்லலாம்.

கோடைகாலம்

குமாவோனின் கோடைக்காலம் ஏப்ரல் மாதம் துவங்கி ஜுன் மாதம் வரை தொடர்ந்திருக்கும். இந்நாட்களில் குமாவோனின் வெப்பநிலை 46°C –லிருந்து 19°C வரையிலும் இருக்கும்.

மழைக்காலம்

குமாவோனின் மழைக் காலம் ஜுலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலும் நீடிக்கும். சராசரியான மழையை பெறும் குமாவோனுக்கு, இந்நாட்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் தேவையான மழை உபகரணங்களை கொண்டு வருவது நல்லது.

குளிர்காலம்

குமாவோனின் குளிர் காலம் அக்டோபரில் துவங்கி பிப்ரவரி வரையிலும் நீடித்திருக்கும். இந்நாட்களில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக முறையே 25°C மற்றும் 4°C பதிவு செய்யப்பட்டுள்ளன. குளிர்காலத்தில் குமாவோனுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தேவையான கம்பளி ஆடைகளை கொண்டு வருவது நல்லது.